ஒரு வழியாக இறங்கி வந்த தேமுதிக! மகிழ்ச்சியில் அதிமுக!

Photo of author

By Sakthi

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்றன விஜயகாந்தின் தேமுதிக கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம் என்பது தொடர்பாக இன்றைய தினம் அதிமுக சார்பாக இறுதி முடிவு செய்யப்பட்டு தொகுதி பங்கீடு கையெழுத்தாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதிமுக கூட்டணியில் இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல அந்த கூட்டணியில் சுமார் 10 ஆண்டு காலமாக நீடித்து வரும் தேமுதிகவிற்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இதுவரையில் இழுபறி தான் நீடித்து வருகிறது. அதேபோல அதிமுக கூட்டணியில் இருக்கின்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கும் இதுவரையில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவே இன்றைய தினம் அந்த இரு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை அதிமுக நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தற்சமயம் இறுதிகட்டத்தை எட்டி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த கட்சி 25 தொகுதிகள் வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்சமயம் அந்த கட்சியை இறங்கிவந்து அதிமுக கொடுக்கிறோம் என்று தெரிவித்த 17 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாக தெரியவந்திருக்கிறது. அதோடு அந்த கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை ஒதுக்குவதற்கு ஆளும் கட்சியான அதிமுக சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அதிமுக மற்றும் தேமுதிக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நேற்றைய தினம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியது என்று சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிகவின் துணை பொதுச் செயலாளர் சுதீஷ் உள்பட முக்கிய நிர்வாகிகள் நேரில் பார்த்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள் அவர்களுடைய பேச்சுவார்த்தை நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக, அதிமுக மற்றும் தேமுதிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று முடிவாக இருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

அதன்படி அதிமுக கூட்டணியில் தேமுதிக கட்சிக்கு 17 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் சீட்டும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒருவழியாக அதிமுக கூட்டணியில் ஏற்பட்ட வந்த தொகுதி பங்கீடு பேரம் முடிவுக்கு வந்திருப்பதாக சொல்கிறார்கள். ஆகவே இனிவரும் காலங்களில் அதிமுக கூட்டணி கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்கிறார்கள்.