ஆட்சியை பிடிக்க பாஜக பலே திட்டம்! அதிர்ச்சியில் ஆளும் தரப்பு!

0
77

மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி வீழ்த்தப்பட்டு தங்களுடைய ஆட்சியை கொண்டுவரவேண்டும் என்ற நினைப்பில் பாரதிய ஜனதா கட்சி மிகத் தீவிரமாக அங்கே தன்னுடைய அரசியல் வேலைகளை தொடங்கி இருக்கிறது.அந்த விதத்தில், மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை தன் வசம் படுத்துவதற்கான முயற்சிகளை பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அந்த விதத்தில், மேற்குவங்கத்தில் பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி ஆகிய பாஜகவின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.அதேபோல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சார்ந்த மிக முக்கிய தலைவர்களை தங்கள் வசம் கொண்டு வந்து அந்த கட்சியை மேற்குவங்கத்தில் அமைப்பு ரீதியாக பலவீனமடையச் செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம் என்று சொல்லப்படுகிறது.

ஆகவே அதற்கான வேலைகள் எல்லாம் பாஜகவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இறங்கி வருவதாக சொல்கிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் அரசியல் சாணக்கியர் என்று சொல்லப்படும் உள்துறை அமைச்சர் இதுவரையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து இருக்கின்றார் என்றும் சொல்லப்படுகிறது.அப்படி இந்தியாவில் பல மாநில ஆட்சியை கவிழ்த்து அங்கே பாஜகவை பலமடைய செய்து அந்த மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி மலர வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட அமித்ஷாவின் பார்வையானது தற்சமயம் மேற்கு வங்க மாநிலத்தில் விழுந்திருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. ஆகவேதான் பாஜகவின் முக்கிய தலைவர்கள் எல்லோரும் அந்த மாநிலத்தை குறி வைத்திருப்பதாக சொல்கிறார்கள்.

அதன் காரணமாக, எவ்வளவு பெரிய ஆட்சியாளராக இருந்தாலும் ஏதாவது ஒரு சில விஷயங்களில் தவறு செய்வது இயல்புதான் அந்த வகையில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தற்போதைய முதல்வர் மம்தா பானர்ஜி திறமையாக ஆட்சி செய்து வந்தாலும் கூட அவர் செய்யும் இதுவரையில் செய்து வைத்திருக்கின்ற சிறுசிறு தவறுகள் என்னவென்று பாஜக ஆராயத் தொடங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.அப்படி அவர் செய்த தவறுகள் அனைத்தையும் தேடி கண்டுபிடித்து கையில் எடுத்துக் கொண்டு அதையே அவருக்கான ஆயுதமாக பயன்படுத்த இருப்பதாக சொல்கிறார்கள். அதற்கான வேலைகளில் தான் தற்சமயம் பாஜக இறங்கி இருக்கிறது என தெரிவிக்கிறார்கள்.