திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!!!

Photo of author

By Parthipan K

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!!!

Parthipan K

Updated on:

திருவொற்றியூர் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம்!!

சென்னை, திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்தது தொடர்பாக தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்

சென்னை திருவொற்றியூரில் உள்ள அறிவாக்குளம் பகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த திங்கள் கிழமை இடிந்து விழுந்து தரைமட்டமானது.

வீடுகளில் இருந்த உடமைகள் அனைத்தும் இடிபாடுகளில் சிக்கி கொண்டதால் நிற்கதியாக நிற்கும் மக்கள், தற்போது அங்குள்ள தனியார் மண்டபத்தில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு மாற்று வீடுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

இருப்பினும் வீடுகளை இழந்த மக்கள் அனைவரும், கூலித்தொழிலாளர்கள் என்பதால் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதை அரசு கவனத்தில் கொண்டு திருவொற்றியூர் பகுதியிலேயே அவர்களுக்கு குடியிருப்புகளை ஒதுக்கித்தர தமிழக அரசு முன்வர வேண்டும் என கூறியுள்ளார். அதுவரை பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு ஏதுவாக தமிழக அரசே வாடகைக்கு வீடுகளை எடுத்து அவர்களை குடியமர்த்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும், தற்போது தங்குவதற்கு இடமில்லாமல் தவிப்பதால் உடனடியாக வாடகை வீடுகளில் அவர்களை தங்க வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் தேமுதிக சார்பில் களத்தில் ஆய்வு செய்தபோது, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் உண்மை நிலை பற்றி  கேட்டறிந்ததாகவும், எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.