கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி

0
53

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி!!

இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. டெல்லியிலும் அதன் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய காரணத்தால் அங்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்படுவதாக அறிவித்த அந்த மாநில அரசு சில புதிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

அந்த வகையில் சென்னையிலும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை அசோக் நகர் பகுதிக்குட்பட்ட 19-வது தெருவில் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு உட்பட்ட சுற்றுப்புற இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் சென்னையில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களை சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாகவும், சுகாதாரப்பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் ஆகியோர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை பரிசோதனை செய்து கண்காணித்து வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போதிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொற்று பரவலை கட்டுப்படுத்த போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதை முழுவீச்சில் செயல்படுத்தி வருவதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி அதில்,

பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் கிருமிநாசினியை உபயோகிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

author avatar
Parthipan K