மாணவியின் அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டிய திமுக நிர்வாகி!! F.I.R- யில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு  படிக்கும் மாணவி ஒருவர் நேற்று இரவு உணவு அருந்திய பின் தனது ஆண் நண்பருடன் பேசி கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் அந்த ஆண் நண்பரை அடித்து துரத்தி விட்டு மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக வெளியான செய்தி தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அந்த மாணவி தனக்கு நேர்ந்ததை  கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாராக அளித்து இருக்கிறார். எனவே, பல்கலைக்கழகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அருகில் இருந்த பிரியாணி கடை வைத்து இருக்கும் ஞானசேகரன் என்பது தெரியவந்தது. அவர் திமுக சைதை கிழக்கு தொகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் ஆவர்.

மேலும் அவர் மீது முன்னதாக 15 பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவருக்கு 15 நாள் காவல் விசாரணை விதிக்கப்பட்டது. அவர் போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிக்க முயலும் பொது கீழே விழுந்து கை, கால்களில் முறிவு ஏற்பட்டது. மேலும் அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்து சிறையில் அடைத்தனர்.

அவரிடம் F.I.R (முதல் தகவல் அறிக்கை) வெளியடப்பட்டுள்ளது. அதில் கடந்த திங்கட்கிழமை மாலை ஒரு மாணவருடன் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து அவரது கல்லூரி டீன், பேராசிரியரிடம் காண்பித்து டி.சி.யை தரவைப்பேன் என ஞானசேகரன் மிரட்டியதாகவும் மேலும் செல்போனில் இருந்த தந்தையின் எண்ணை எடுத்து வீடியோவை அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மாணவியும், மாணவனும் ஞானசேகரனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள்.

இதை அடுத்து மாணவனை செல்லுமா று கூறியுள்ளார். மாணவன் சென்றதும் மாணவி எவ்வளவு கெஞ்சியும் விடாமல் வலுக்கட்டாயமாக ஞானசேகரன் துன்புறுத்தியதாகவும் F.I.R-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.