நாம் தமிழர் கட்சியினர் வேட்பாளர்களை பார்த்து பயப்படும் திமுக.. சீமான் குற்றச்சாட்டு.!!

0
176

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக, உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது இதனையடுத்து விழுப்புரத்தை அடுத்த கோலியனூர் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் நடைபெறும் அனைத்து பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் விசிக மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும் ஒவ்வொரு தேர்தலிலும் நாம்தமிழர்கட்சி ஆனது தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தலில் வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்போம் தமிழகத்தை ஆள்பவர்கள் தான் மாறிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் ஆட்சியில் எந்த வித மாற்றமும் நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், ஸ்டாலின் தனது வாக்குறுதியில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளார். ஆனால், அவர் அதில் பத்தை கூட நிறைவேற்றவில்லை மேலும், மத்திய அரசானது மாநில அரசுகளின் தீர்மானங்கள் எதையும் கணக்கில் எடுத்துக் கொள்வதேயில்லை.

இந்த நிலையில் வேட்பு மனுவை வாபஸ் வாங்குமாறு திமுகவினர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை கடத்தி சென்று மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து காவல் துறையினருக்கும், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை இந்நிலையில் மிகப் பழமையான திமுக கட்சி அது எங்களைப் பார்த்து மிகவும் பயப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

Previous articleதமிழகத்திற்கு உலக வங்கி அளித்துள்ள கடன் உதவி.. இத்தனை கோடியா.!!
Next articleகல்யாணம் செய்யனுமா? அப்போ கன்னித்தன்மையை பரிசோதிக்க வேண்டுமென கூறி என்ஜீனியருக்கு தொல்லை!