விஜய்யின் தவெகவுடன் திமுக கூட்டணி? 500 கோடிக்கு டீல் பேசிய விவகாரம் லீக் 

0
109
Actor Vijay
Actor Vijay

ரசிகர் விஜய் தற்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துவிட்டார். ஜனநாயகன் படத்தை முடித்து விட்டு தற்போது முழு நேர அரசியல்வாதியாக விஜய் அரசியலில் இறங்கி விட்டார். தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் திமுக கட்சியையும், மத்தியில் ஆளும் பாஜகவையும் விமர்சித்து வருகிறார் விஜய்.

2026 இல் நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலில் விஜய்யை முதல்வராக ஏற்கும் கட்சியுடன் கூட்டணி எனவும், கூட்டணிக்கான தவெக கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும் எனவும் விஜய் தெரிவித்துள்ளார். விஜய்யின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் விஜய்யுடன் கூட்டணிக்கு வரலாம் என தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.

ஆனால் விஜய் கடைசி நேரத்தில் அதிமுக பாஜக கூட்டணிக்கு சென்று விடுவார் என்று தகவல்கள் பரவி வருகின்றன. கடைசி நேரத்தில் விசிக, காங்கிரஸ், பாமக போன்ற கட்சிகளும் தவெக கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில் அதிமுக கட்சியை சேர்ந்த கே.சி.கருப்பண்ணன் திமுக விஜய்க்கு கொடுத்த ஒரு கூட்டணி ஆஃபர் பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். ரூபாய் 500 கோடி தருவதாக சொல்லி விஜய்க்கு திமுக கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததாகவும், விஜய் அந்த அழைப்பை நிராகரித்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளார் கருப்பண்ணன். விஜய் திமுக கூட்டணிக்கு எப்போதும் செல்லமாட்டார் என்றும், ஒரு வேலை விஜய் திமுகவின் கூட்டணிக்கு சென்றுவிட்டால் விஜய்யின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிடும் என்றும் பேட்டி கொடுத்துள்ளார் கே.சி.கருப்பண்ணன்.

Previous articleரஜினிக்கும் தனுசுக்கும் உள்ள வித்தியாசம் இது தான்! நாகர்ஜுனா ஓபன் டாக்!
Next articleபோதை பழக்கமே இல்லையென்ற ஸ்ரீகாந்த்! இறுதியில் சிக்கிய ஆதாரம்