திமுகவினர் தொடர்ந்து செய்த அராஜகம்! உதயநிதிக்கு அமைக்கப்பட்ட மேடையை உடைத்த பாமகவினர்
மாற்று கட்சிகளுக்கு எதிராக திமுகவினர் தொடர்ந்து அராஜகம் செய்து வருவதால் பெரம்பலூரில் உதயநிதிக்காக அமைக்கப்பட்ட மேடையை பாமகவினர் உடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக பிரச்சாரத்திற்காக திமுக செல்லும் பல்வேறு வட மாவட்ட பகுதிகளில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.அந்த வகையில் நேற்று அரியலூர்க்கு பிரச்சாரத்திற்கு சென்ற உதயநிதியின் பிரச்சார மேடையில் G.K மூப்பனாரின் பெயர் அழிக்கப்பட்டதால் உதயநிதியை சட்டையை பிடித்து அடிக்கும் அளவிற்கு தமாகவினர் சென்றார்கள்.
அதே போல் இன்று பெரம்பலூரில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய போடப்பட்ட மேடையை பாமகவினர் அடித்து உடைத்துள்ளார்கள்.இந்த சம்பவமானது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அந்த கட்சியினரிடம் கேட்ட போது பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உதயநிதி பிரச்சாரம் செய்ய திமுகவினர் மேடை அமைத்துள்ளனர்.இந்த மேடையை அமைக்க பாமக கொடிக் கம்பத்தை திமுகவினர் அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.பாமக சார்பாக 1992 ஆம் ஆண்டு மருத்துவர் ராமதாஸ் தலைமையில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு அவர்களால் அம்பேத்கார் சிலை திறக்கப்பட்டு அதற்கு அருகில் இந்த கொடி கம்பம் அமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கம்பத்தை தான் உதயநிதி ஸ்டாலினுக்கு மேடை அமைக்கும் போது திமுகவினர் பிடுங்கி வீசியுள்ளார்கள்.இதனால் ஆத்திரம் அடைந்த பெரம்பலூர் பாமகவினர் அங்கு வந்து உதயநிதிக்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையை உடைந்து எறிந்ததாக சொல்கிறார்கள்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறை அதிகாரிகள் இரு தரப்பையும் சமரசம் செய்து மீண்டும் பாமக கொடி அதே இடத்தில் நடப்பட்டது.மேலும் திமுகவின் இந்த அராஜக செயலை கண்டித்து பாமக சார்பாக காவல் துறையினரிடம் புகார் மனுவும் தரப்பட்டுள்ளது.
ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்பே திமுகவினர் இவ்வளவு அராஜகம் செய்தால், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலை என்னவாக இருக்கும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் விமர்சித்து வருகிறார்கள்.