தினமலர் நாளிதழ் நிரூபரை தாக்கிய திமுக! மீண்டும் தலைதூக்கும் ரௌடிசம்!
100 நாள் வேலைத்திட்டம் என்பது ஒரு குடும்பத்திற்கு வருடத்தில் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என்பது தான் இந்த சட்டம். அந்த வகையில் அனைத்து ஊர் பொதுமக்களும் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் செல்வர். அவ்வாறு செங்கல்பட்டு முருங்கை கிராமத்தில் மக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டம் இம்முறை தரப்படவில்லை. அதற்கு மாற்றாக ஜேசிபி எந்திரம் பயன்படுத்தி மீன் குட்டை அமைக்கும் பணியை மேற்கொண்டனர். இதனால் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பயனடைய முடியாத மக்கள் கவலையுற்று இருந்தனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அம்மா பெயரில் இயங்கிய திட்டங்களை அடித்து நொறுக்கி ரௌடிசம் செய்து வந்தனர்.அந்தவகையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதன் முதலில் அம்மா உணவகம் திமுக உறுப்பினர்கள் சிலர் அடித்து உடைத்தனர் குறிப்பிடத்தக்கது.அதனையடுத்து தற்பொழுது மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
100 நாள் வேலை திட்டத்தை மக்கள் பயன்னடைய முடியாமல் போனதை செய்தியாக்க தினமலர் நாளிதழ் நிரூபர் மோகன் என்பவர் முருங்கை கிராமத்திற்கு சென்று செய்திகளை சேகரித்தார். அவ்வாறு செய்தி சேகரிக்கும் பொழுது ஏரியில் மீன் பண்ணை குட்டை ஏற்படுத்திய பலத்தையும் புகைப்படம். இவ்வாறு புகைப்படம் எடுத்து மீண்டும் அவர் வீட்டிற்கு சென்றார். இந்த செய்தியை அறிந்த முழங்கை ஊராட்சி தலைவரின் மகன் மற்றும் அவரது மாமனார் ஆகியோர் தினமலர் நிருபர் திரு மோகன் வீட்டிற்கு சென்றனர்.
இவர்களுடன் சில திமுக கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் சென்றுள்ளனர். அவரது வீட்டிற்கு சென்று இதனை செய்தியாக போடக்கூடாது என்று கூறி அவரது பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் ஆபாசமாகவும் தினமலர் நாளிதழ் நிருபர் திரு மோகன் குடும்பத்திடம் பேசியுள்ளனர். அதனையடுத்து நாளிதழ் நிருபர் மோகன் அவரின் தந்தை மற்றும் தாயை கொலைவெறி தாக்குதலுடன் தாக்கியுள்ளனர். தாக்கியதையடுத்து தற்பொழுது தினமலர் நாளிதழ் நிருபர் காவல்துறையிடம் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறுகின்றனர்.
அவரது பெற்றோருக்கு தற்பொழுது மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது, ஒரு நிருபருக்கு இத்தகைய கதி என்றால் சாதாரண பொதுமக்களுக்கு எந்த அளவு பாதிக்கப்படுவார்கள் நினைத்து பார்க்கையில் அச்சமாக உள்ளது என்று கூறியுள்ளார். பத்திரிக்கை சுதந்திரத்தை பறிக்கும் செயலில் திமுக தொடர்ந்து பல கொலை வெறி தாக்குதலை செய்து வருகிறது.
மேலும் அந்தச் முருங்கை கிராமத்தின் ஊராட்சி தலைவரின் குடும்பத்தினர் மற்றும் நாளிதழ் நிருபர் திரு மோகன் அவர்களின் குடும்பத்தை தாக்கிய சில திமுக பிரமுகர்கள் அவர்களை சட்டத்தின் முன் நிலையில் நிறுத்தி தக்க தண்டனை பெற்று தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் பொது மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் இதுபோல் அசம்பாவிதம் நடக்காமல் இருக்கவும் பத்திரிக்கை சுதந்திரத்தை நிலைநாட்டவும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் ஓ பன்னீர்செல்வம் கேட்டுள்ளார்.மேலும் இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையாக பதிவு செய்துள்ளார்.