இந்தியா தென்னாபிரிக்கா இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி! விறுவிறுப்பான கட்டத்தில் ஆட்டம்!

0
83

இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அணிகளுக்கு இடையி லான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜொகன்னஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதுகு வலியின் காரணமாக, இந்த டெஸ்ட் போட்டியிலிருந்து விராட் கோலி விலகியிருக்கிறார். இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார், இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது கேப்டன் லோகேஷ் ராகுல் அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார், ரவிச்சந்திரன் அஸ்வின் 46 ரன்களை எடுத்தார், தென்ஆப்பிரிக்க அணியின் சார்பாக மார்கோ ஜென்சன் 4 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் டுவானே ஒலிவியர், தலா 3 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து 2வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது, 202 ரன்கள் பின்தங்கி இருக்கின்ற சூழ்நிலையில், தென்ஆப்பிரிக்கா அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. அதன் தென்ஆப்பிரிக்க அணியில் தன்னுடைய அறிமுக போட்டியில் களமிறங்கிய கீகன் பீட்டர்சன், அரைசதம் கண்டு அசத்தினார், அவர் 62 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இதனைத் தொடர்ந்து அந்த பவுமா அரைசதம் அடித்து அசத்தினார், அவர் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த பின்வரிசை ஆட்டக்காரர்கள் ஆன ஜென்சன் மற்றும் கேஷவ் மஹராஜ் உள்ளிட்டோர் தலா 21 ரன்கள் எடுத்ததால் கடைசி கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலமாக இந்திய அணியை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது தென்ஆப்பிரிக்க அணி.

இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய ஷர்துல் தாகூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக ஒரே இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.முகமது சமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் பும்ரா 1 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

தென் ஆப்பிரிக்க அணியை விட 27 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாட தொடங்கியது கேப்டன் லோகேஷ் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார், அடுத்ததாக மயங்க் அகர்வால் 23 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார்.

ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்து இருக்கிறது புஜாரா 35 ரன்களுடனும், ரஹானே 11 ரன்களுடனும், ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்கள். இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.

இரண்டாவது நாள் ஆட்டத்தின் முடிவில் இரண்டு அணிகளும் முதல் இன்னிங்சை முடித்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியிருப்பதால் இரண்டாவது டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது