முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட திமுக மாமன்ற உறுப்பினர்கள்! இறுதியாக என்ன நடந்தது தெரியுமா?

மதுரை தமுக்கம் மைதானத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற விழாவிற்கு வருகை தந்த திமுகவின் மாமன்ற உறுப்பினர்கள் 50க்கும் மேற்ப்பட்டோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதன் காரணமாக, அதிருப்திக்குள்ளான திமுக மாமன்ற உறுப்பினர்கள் தங்களை ஆடு,மாடு போல அடைத்து வைத்திருக்கிறார்கள் எனவும், தங்களை விழாவிற்கு அழைத்திருக்க வேண்டாம் என்று தெரிவித்தும், கூச்சலிட்டனர்.

இதன் காரணமாக, அந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மேயர் இந்திராணி மற்றும் மாநகர ஆணையர் ஸிம்ரன் உள்ளிட்டோர் மாமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேயர் மற்றும் ஆணையர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலமாக சமாதானமடைந்த மாமன்ற உறுப்பினர்களை முதலமைச்சர் ஸ்டாலின் விழாவினை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சமயத்தில் அவரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேயர் மற்றும் ஆணையர் உள்ளிட்டோர் செய்து கொடுத்தனர்.

Leave a Comment