திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வேட்புமனுவில் திடீர் சிக்கல்!! சேலம் மக்களவையில் தொடர் பரபரப்பு!!
தற்போது நடைபெறப்போகும் மக்களவை தேர்தலில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிட உள்ளனர் என்பது குறித்து அடுத்தடுத்த எதிர்பார்ப்பில் தேர்தல் களமானது மிகவும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.அந்த வகையில் சேலத்தில் திமுக சார்பாக டி எம் செல்வகணபதியும் அதிமுக சார்பாக விக்னேஷ் என்பவரும் பாஜக சார்பாக அவர்களது கூட்டணியில் இருக்கும் பாமக-வை சேர்ந்த அண்ணாதுரை உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வேப்பமனு தாக்கல் ஆனது நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் இன்று அதுகுறித்து பரிசீலனை செய்து வருகின்றனர்.அந்த வகையில் பரிசீலணையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவிற்கு அப்பாற்பட்டு இருந்தால் அவர்களது வேட்பு மனுவானது நிராகரிக்கப்படும்.அதன்படி தற்பொழுது திமுக சார்பாக வேட்பு மனு செய்திருந்த டி எம் செல்வகணபதியின் வேட்பு மனுவானது நிராகரிக்கும் பட்சத்தில் உள்ளது.
ஏனென்றால் இவரது வாக்குரிமையானது இரண்டு இடங்களில் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.இது குறித்து விசாரணை செய்கையில், இரண்டு வாக்குரிமை உள்ளது உறுதியாகி உள்ளது.டி எம் செல்வகணபதி தான் அளித்த வேட்புமனுவில் இரண்டு இடங்களில் வாக்குரிமை இருப்பது குறித்து குறிப்பிட்டு இருந்தால் இவரது வேட்பு மனுவானது நிராகரிக்கப்படாது என்றும் அல்லது குறிப்பிடப்படாமல் இருந்தால் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 17, 18 படி இது கிரிமினல் குற்றம் என்பதால் கட்டாயம் நிராகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
டி எம் செல்வகணபதி தற்பொழுது புதிய இடத்தில் குடி பெயர்ந்து உள்ளதால் அங்கு ஒரு வாக்குரிமை இருப்பதாகவும் முன்பு குடியிருந்த இடத்தில் ஓர் வாக்குரிமை இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.இவரது மனு தாக்கல் நிராகரிப்பு குறித்து தேர்தல் ஆணையம் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை.மேற்கொண்டு இந்த இரட்டை வாக்குரிமை குறித்து விளக்கம் தரக்கோரி கேட்டுள்ளனர்.