இட ஒதுக்கீடு வன்னியருக்கு கலைஞர் போட்ட பிச்சை! மன்னிப்பு கேட்ட திமுக

Photo of author

By Parthipan K

கலைஞர் போட்ட பிச்சை தான் இட ஒதுக்கீடு சர்ச்சை பேச்சு: வன்னியர்களிடம் மன்னிப்பு கேட்ட திமுக சேர்மன்.

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் திமுக கட்சியானது அதிமுகவை நிராகரிப்போம் ,ஸ்டாலின் குரல்,கிராம சபை கூட்டம் என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்சிகளில் ஆளும் அதிமுக அரசின் குறைகளை பட்டியல் போட்டும், திமுக தலைவர் கலைஞர் அவர்களின் பெருமையும் பேசியும் அந்தந்த ஊர்களில் கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இதே போல் நொச்சிக் குப்பம் கிராமத்தில் திமுக சார்பில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த கூட்டத்தில் “வன்னியர் சமுதாயம் மற்ற சமுதாயம் போல விழிப்புணர்வு இல்லாத சமுதாயம். காடு உண்டு வீடு உண்டுன்னு இருந்த வன்னியர்கள் இன்ஜினியர் டாக்டர் ஆவுறாங்கன்னா, அது வன்னியர்களுக்கு கலைஞர் போட்ட பிச்சை” என பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் சேர்மனும், திமுக ஒன்றிய செயலாளருமான கிருஷ்ணமூர்த்தி ஆணவமாக பேசியிருந்தார். மேலும் அதனால் வன்னியர்களாகிய நீங்கள் திமுகவுக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக வன்னிய சமுதாய மக்களும் பாமகவினரும் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர் மேலும் திமுக தரப்பிலும் கண்டனங்களை தெரிவிக்கப்பட்டது.குறிப்பாக இதற்கு பெரம்பலூர் மாவட்ட பாமக செயலாளர் கோ.ராஜேந்திரன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் நான் பேசியது தவறு தான் என்னை வன்னிய சமுதாய மக்கள் மன்னித்து விட வேண்டும் என்று பேசியுள்ளார்.

இதே போல் தான் சில மாதங்களுக்கு முன்பு திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி “ஆதிதிராவிடர்களுக்கு நீதிமன்றப் பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என பேசியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது‌‌.