பார் உரிமையாளர்களை மிரட்டும் உடன் பிறப்புகள்! கோவையில் பரபரப்பு!

Photo of author

By Sakthi

கோயமுத்தூர் மாவட்டத்தில் இருக்கின்ற கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய இளைஞரணி திமுக அமைப்பாளராக இருந்து வருபவர் பாலச்சந்திரன் கிணத்துக்கடவு பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளுக்கு சென்று அந்த கடையின் உரிமையாளர்களை சந்தித்து தன்னை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் முகமது யாசின் அனுப்பி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அதோடு தங்களுக்கு நாள்தோறும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் எனவும், பணம் கொடுக்க இயலாத பட்சத்தில் வேறு ஆட்களை வைத்து நாங்களே பார்களை நடத்திக் கொள்கின்றோம் என்றும், நீங்கள் பாரை அப்படியே விட்டுவிட்டு சென்று விடலாம் எனவும் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சியடைந்த முகமது யாசின் வீட்டிற்கு சென்று அவரிடம் பேசியபோது அவரும் மிரட்டும் விதத்திலேயே பேசியிருக்கிறார். இதனால் பார் உரிமையாளர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இதுபோன்ற சூழ்நிலையில், பார் உரிமையாளர்கள் இன்று தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்கும் நிலையில் இது குறித்த சம்பவங்கள் தொடர்பாக இவ்வாறு நடக்கின்றது நாங்கள் எப்படி பிழைப்பது மாதத்திற்கு பத்தாயிரம் கேட்டாலும் கொடுத்து விடலாம் ஒரு நாளைக்கு 5000 கேட்டால் எங்கே செல்வது என புலம்புகிறார்கள்.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் உடன் கலந்து பேசி போராட்டம் நடத்த திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.அதோடு கோவை பகுதியில் திமுக பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.