அப்துல் கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக காங்கிரஸ் கட்சிகள் தடுத்தன! ஆளுநர் தமிழிசை சௌவுந்தர்ராஜன் பேட்டி!!

0
202
#image_title

அப்துல் கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக காங்கிரஸ் கட்சிகள் தடுத்தன! ஆளுநர் தமிழிசை சௌவுந்தர்ராஜன் பேட்டி!

 

அப்துல்கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தடுத்ததாக புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

 

புதுச்சேரியில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் அளித்த பேட்டியில் “புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து என்பதை திரும்ப பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

 

தமிழர் பிரதமராகும் வாய்ப்பு திமுக கட்சியால் மறுக்கப்பட்டது என்று உள்துறை அமைச்சர் கூறினார். தமிழர் பிரதமராக வருவது மட்டுமின்றி தமிழர் அப்துல் கலாம் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி ஆவதை திமுக,  காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து தடுத்தன.என்ற வரலாற்றை மறைக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. திமுக கட்சியின் குற்றத்தை உள்துறை அமைச்சர் நேரடியாக கூறும்பொழுது சரித்திரத்தை மறைக்க தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்.அவர்கள் ஏதேதோ சொல்கிறார். அதையெல்லும் கருத்தாக ஏற்க முடியாது.

 

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அளவுக்கு தமிழ் மொழியை யாரும் கையாண்டது கிடையாது. திருக்குறள், பாரதியார், தமிழ் கலாச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எடுத்து கூறியது போல வேறு யாரும் எடுத்து கூற முடியாது. மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழர்களின் கலாச்சாரம், பெருமை, தொன்மையை எடுத்துரைத்து பச்சைத் தமிழனாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பணியாற்றி வருகிறார். மேலும் பாராளுமன்றத்தில் செங்கோல் வைத்து மீண்டும் அதை உறுதி செய்துள்ளார்.

 

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தமிழ் மறுக்கப்படாது என்று ஏற்கனவே கூறிவிட்டோம். தமிழ்நாட்டில் 50000 பேர் பொதுத்தேர்வில தமிழ் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளனர். தமிழ் பேசுவது மட்டுமின்றி தமிழ் மொழியை அரியணையில் ஏற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும். தமிழ் பாடத்தை படிப்பது இன்றைய காலகட்டத்தில் அரிதாகி விட்டது.

 

சிபிஎஸ்இ பாடத்திட்டம் வந்தால் மாணவர்களின் ஆற்றல், வாழ்க்கைத் தரம் உயரவும், சவால்களை சமாளிக்கவும் உறுதுணையாக இருக்கும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தால் புதுச்சேரியில் புரட்சி ஏற்படுத்திவிடுவார்களே என்று எதாவது பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மீது அவர்களுக்கு மட்டுமே பற்று உள்ளது போல செயல்படுகின்றனர். தமிழ் எங்கள் உயிர் என்று” கூறியுள்ளார்.

 

Previous articleபிரபல வில்லன் நடிகர் கசான் கான் அவர்கள் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!
Next articleமேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி! போட்டி அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!!