மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி! போட்டி அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!!

0
142
#image_title

மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இந்திய கிரிக்கெட் அணி! போட்டி அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ!

 

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி பங்கேற்று விளையாடும் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

 

கடந்த மே மாதம் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சேம்பியன் சிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடிது. இதில் அபாரமாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2023ம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது.

 

ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியோடு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகள், ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

 

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 12ம் தேதி தொடங்குகிறது. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஜூலை 27ம் தேதியும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகஸ்ட் 3ம் தேதியும் தொடங்குகிறது.

 

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதும் போட்டிகளுக்கான அட்டவணை:

 

டெஸ்ட் தொடருக்கான அட்டவணை;

 

  1. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் முதல் டெஸ்ட் போட்டி மேற்கிந்திய தீவுகள் நாட்டில் உள்ள டோமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் ஜூலை 12ம் தேதி தொடங்கி ஜூலை16ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

 

  1. இரு அணிகளும் மோதும் இரண்டாவது டொஸ்ட் போட்டி டிரினைய்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஜூலை 20ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகின்றது.

 

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி மோதும் ஒரு நாள் போட்டிகளுக்கான அட்டவணை;

 

  1. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி ஜூலை 27ம் தேதி பார்படாஸில் உள்ள கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகின்றது.

 

  1. இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 29ம் தேதி பார்படாஸில் உள்ள கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகின்றது.

 

  1. இந்த இரண்டு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 1ம் தேதி டிரினைய்டில் உள்ள பிரெய்ன் லாரா கிரிக்கெட் அகாடெமி ஸ்டேடியத்தில் மைதானத்தில் நடைபெறுகின்றது.

 

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் டி20 தொடருக்கான அட்டவணை;

 

  1. இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி ஆகஸ்ட் 3ம் தேதி டிரினய்டில் உள்ள பிரெய்ன் லாரா கிரிகெட் அகாடமி மைதானத்தில் நடைபெறுகின்றது.

 

  1. இரண்டு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி ஆகஸ்ட் 6ம் தேதி கைனாவில் உள்ள நேஷ்னல் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

 

  1. இரண்டு அணிகளும் மோதும் மூன்றாவது டி20 போட்டி ஆகஸ்ட் 8ம் தேதி கைனாவில் உள்ள நேஷ்னல் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

 

  1. இரண்டு அணிகளும் மோதும் நான்காவது டி20 போட்டி ஆகஸ்ட் 12ம் தேதி புளோரிடாவில் உள்ள புரோவார்ட் கவுண்டி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

 

  1. இரண்டு அணிகளும் மோதும் ஐந்தாவது டி20 போட்டி ஆகஸ்ட் 13ம் தேதி புளோரிடாவில் உள்ள புரோவார்ட் கவுண்டி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.