பிரபல வில்லன் நடிகர் கசான் கான் அவர்கள் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

0
94
#image_title

பிரபல வில்லன் நடிகர் கசான் கான் அவர்கள் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

 

தமிழ், மலையாளம் மொழிப் படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் கசான் கான் அவர்கள் மரணம் அடைந்த செய்தி திரையுலகத்தையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மலையாள திரையுலகின் தயாரிப்பாளர் என் எம் பாதுஷா அவர்கள் நடிகர் கசான் கான் அவர்களின் மரணத்தை உறுதிபடுத்தியுள்ளார்.

 

நடிகர் கசான் கின் அவர்கள் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். நடிகர் கசான் கான் அவர்கள் 1992ம் ஆண்டு வெளியான செந்தமிழ் பாட்டு என்ற திரைப்படத்தில் நடித்தது மூலமாக தமிழ் சினிமாவில் நடிகர் கசான் கான் அவர்கள்  அறிமுகம் ஆனார்.

 

வில்லன் கதாப்பாத்திரங்களை மட்டுமே விரும்பி தேர்வு செய்து நடிகர் கசான் கான் அவர்கள் படங்களில் நடித்து வந்தார். நடிகர் கசான் கான் அவர்கள் வில்லனாக நடித்த பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.  சேதுபதி ஐபிஎஸ், வல்லரசு, மேட்டுக்குடி, வானத்தைப் போல, முறைமாமன் போன்ற 90களில் வெளிவந்த பல படங்களில் இவர் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார். நடிகர் விஜய் நடித்த பிரியமானவளே, பத்ரி ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

 

நடிகர் கசான் கான் அவர்கள் 1993ம் ஆண்டு வெளியான காந்தர்வம் என்ற மலையாளப்படத்தில் நடித்ததன் மூலமாக மலையாள சினிமாவிலும் அறிமுகமானார். காந்தர்வம் படத்தை தொடர்ந்து வர்ணபகிட்டு, தி டான், தி கிங், ராஜாதி ராஜா, மாயமோகினி, மரியாதா ராமன் போன்ற திரைப்படங்களிலும் நடிகர் கசான் கான் நடித்துள்ளார். நடிகர் கசான் கான் அவர்கள் கடைசியாக 2015ல் வெளியான லைலா ஓ லைலா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

 

பத்து ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் நடிகர் கசான் கான் அவர்கள் பயணித்துள்ளார். இவர் வில்லன் கதாப்பாத்திரத்தின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்திருந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார்.

 

இந்த நிலையில் நடிகர்.கசான் கான் அவர்களின் மறைவு திரையுலகத்தையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் கசான் கான் அவர்களின் மரணம் தொடர்பாக எந்த ஒரு தகவலும் கிடைக்கப்பெறாமல் இருக்கும் நிலையில் இவரது மறைவு செய்தியை அறிந்த திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.