அதிமுகவின் கோட்டைக்குள் நுழைந்த ஸ்டாலின்! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

Photo of author

By Sakthi

சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதைத் தொடர்ந்து அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே அவர் அவர்களுக்கு இருக்கின்ற வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வதிலும், அந்தந்த கட்சிகள் பலத்துடன் இருக்கும் பகுதிகளில் அந்த கட்சிகளின் பலத்தை இன்னுமும் அதிகப்படுத்திக் கொள்ளும் முயற்சியிலும், ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த விதத்தில் அதிமுக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோல அதிமுகவிற்கு ஈடுகொடுக்கும் வகையில் திமுகவும் தனி குழு அமைத்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.இப்படி இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான போட்டி என்பது தமிழகம் முழுவதிலும் இருந்து வந்தாலும் கூட அதில் உற்றுநோக்கபடுவது கொங்கு மண்டலப் பகுதி தான் என்று சொல்கிறார்கள். கோயமுத்தூர் நீலகிரி உள்ளிட்ட சுமார் 9 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த கொங்கு மண்டலத்தில் 61 சட்டசபைத் தொகுதிகள் இருக்கின்றன.

அதிமுகவைச் சேர்ந்த சில முக்கிய அமைச்சர்கள் இந்த கொங்கு மண்டலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதால் இங்கே அதிமுக தனி செல்வாக்குடன் இருந்து வருகிறது. ஆகையால் கொங்குமண்டலம் என்பதை திமுகவால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று சொல்லுமளவிற்கு அதிமுக இந்த பகுதியில் அசுர பலத்துடன் இருந்து வருகின்றது. ஆனால் அந்தக் கட்சி அசைத்துப் பார்க்கும் முயற்சியில் தற்சமயம் திமுக இறங்கியிருக்கிறது என சொல்கிறார்கள்.

ஆனாலும் இந்தப் பகுதியில் வெள்ளாள கவுண்டர் சமூக மக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருவதால் இங்கே அதிமுக தனி செல்வாக்குடன் திகழ்வதாக சொல்கிறார்கள். என்றால் தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சார்ந்தவர் தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் இதுவரையில் தமிழக அரசியல் நிலையைப் பொறுத்தவரையில் எம்ஜிஆர் காலம்தொட்டு கவுண்டர் சமூகத்திலிருந்து யாருமே முதலமைச்சர் பொறுப்பிற்கு வரவில்லை என்று சொல்கிறார்கள். ஆகவே இப்பொழுது முதலமைச்சராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால் இது அதிமுகவிற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கூட கொங்கு மண்டலம் என்பது அதிமுகவின் கோட்டையாகவே இருந்து வந்திருக்கிறது.அப்படிப்பட்ட கோட்டையில் முதல்முறையாக நுழைய முயற்சி செய்திருக்கின்றார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.சுமார் ஒன்பது மாவட்டங்களை கொண்ட கொங்கு மண்டலம் சுமார் 61 சட்டசபை தொகுதிகளை கொண்டிருக்கின்றது. இதில் 47 சட்டசபைத் தொகுதியில் திமுக களமிறங்க இருப்பதாக சொல்கிறார்கள். வழக்கமாக கொங்கு மண்டலம் என்பது அதிமுகவிற்கு சாதகமான பகுதி என்பதால் கொங்கு மண்டலத்திற்கு திமுக சார்பாக பெரிய அளவில் முக்கியத்துவம் தரப்படவில்லை என்றாலும் கூட இந்த முறை அதிமுகவை வெற்றிபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது திமுக என்று தெரிவிக்கிறார்கள்.

வெள்ளாளக் கவுண்டர் சமூக மக்கள் இந்த பகுதியில் அதிகமாக வாழ்ந்தாலும் கூட அந்த சமூகத்தினரை தவிர்த்து அருந்ததியர் போன்ற மற்ற சமூகத்தை சார்ந்தவர்கள் இங்கே கணிசமான அளவில் இருந்து வருகிறார்கள். ஆகவே அவர்களுடைய வாக்குகளைக் கவரும் விதமாக திமுக செயல்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.ஜெயலலிதா உயிருடன் இருந்த வரையில் இந்த கொங்கு மண்டலத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொகுதிகளையும் அதிமுக தான் கைப்பற்றி வந்திருக்கிறது. அந்த சாதனையை இந்த தேர்தலில் உடைத்தெறிய வேண்டும் என்றுதான் ஸ்டாலின் இங்கே களமிறங்க தன் கட்சியை தயார்படுத்தி வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் திமுக சார்பாக இப்படி ஒரு திட்டம் போடப்படும் நிலையில், அதனை அதிமுக எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது. தன் சமூக மக்களின் ஓட்டுகளையும் மற்றும் பிற சமூக மக்களின் ஓட்டுக்களையும் கொங்கு மண்டலத்தில் எவ்வாறு கவரப்போகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு மண்டலத்தை எப்போதும்போல அதிமுகவின் கோட்டையாக வைத்திருப்பாரா? அல்லது கொங்கு மண்டலத்தில் அதிமுக தோல்வியை தழுவுமா என்பது அதிமுகவின் தலைமையின் நடவடிக்கையில் தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.