ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்த கூட்டணி கட்சிகள்! தலையில் கை வைத்த திமுக தலைமை!

0
106

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் மிகக் குறைந்த நாட்களே இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது, பரப்புரை மேற்கொள்வது, வேட்பாளரை தேர்வு செய்வது, வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது, போன்ற கட்சி வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள். அந்த நேரத்தில் ஆளும் கட்சியான அதிமுக வேட்பாளர் தேர்வு மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை போன்றவற்றை முழுமையாக முடித்து விட்டதாக சொல்கிறார்கள்.

கிட்டத்தட்ட தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாக சொல்கிறார்கள். இந்நிலையில், மார்ச் மாதம் 12ஆம் தேதி இன்றைய தினம் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது. ஆகவே இன்று அதிமுக சார்பாக அனேக நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தை தொடங்க இருப்பதாக சொல்கிறார்கள்.

இதுவரையில் அதிமுக இப்படி ஒரு வேகத்துடன் செயல்பட்டது இல்லை என்றும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. அதற்கு காரணம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அடுத்ததாக வரவிருக்கும் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமரவேண்டும் என்ற எண்ணம்தான் என்று சொல்லுகிறார்கள்.அதன் காரணமாக தான் கூட்டணிக் கட்சிகள் எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் அவை எல்லாவற்றையும் சரி செய்து வேட்பாளர்பட்டியல், வேட்பாளர் நேர்காணல்,கூட்டணி பேச்சுவார்த்தை இன்று அனைத்தையும் மிக சாதுரியமாக அதே சமயத்தில் அவருக்கு சாதகமாக முடித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.ஆளும் தரப்பில் இப்படி ஒரு அதிரடியான முடிவுகளை பார்த்த தமிழக மக்களும் மற்றும் அரசியல் கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் சற்றே திகைத்துப்போய் தான் இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

அதே வேளையில், எதிர்க் கட்சியான திமுக கடந்த பத்து வருட காலமாக ஆட்சி பிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. கடந்த 2011ஆம் ஆண்டு திமுக தலைவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் தலைமையில் அந்த கட்சி தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் அந்தத் தேர்தலில் திமுக படுதோல்வி அடைந்தது. அப்போது விழுந்த திமுக இன்றுவரையில் எழுவதற்கு முயற்சி மட்டுமே செய்கிறதே ஒழிய இதுவரையில் எழுந்து நின்றபாடில்லை என்று சொல்கிறார்கள்.

அந்த வகையில், ஆளும் கட்சியான அதிமுக அனைத்து வேலைகளும் முடித்து தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தயாராகிவிட்ட நிலையில், எதிர்க் கட்சியான திமுகவில் இன்று வரையில் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் முழுமையாக முடிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

காரணம் காங்கிரஸ் போன்ற மிக முக்கிய கூட்டணி கட்சிகள் அனைத்தும் திமுகவுடன் முரண்பட்ட கருத்துக்களுடன் இருந்து வருவதாக சொல்கிறார்கள். அதிலும் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததில் திமுக செம கடுப்பில் இருப்பதாக சொல்கிறார்கள். காரணம் சென்ற முறை நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்படியிருக்கையில், இந்த முறை அந்த கட்சிக்கு 25 தொகுதிகளில் இருப்பது மிக அதிகம் என திமுக தலைமை கருதுவதாக சொல்கிறார்கள்.

இதேபோன்று அந்தக் கூட்டணிக்குள் இருக்கக்கூடிய ஒவ்வொரு கட்சிகளுக்கும் அதிக இடங்களை எதிர்பார்க்கிறார்கள் அந்த கட்சிகளின் தலைவர்கள். ஆனால் மிக அதிக இடங்களை கொடுப்பதற்கு திமுக தலைமை தயாராக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.அனேக கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைமை ஒற்றை இலக்க தொகுதி தான் கொடுத்திருக்கின்றது. அதனால் திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய அனைத்து கூட்டணி கட்சிகளும் திமுக தலைவர் மீது மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக சொல்கிறார்கள்.

திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அவர்களின் எண்ணப்படி அதிமுக 200க்கும் குறையாத தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற கனவு தகர்ந்து போனது. அதற்கு காரணம் அந்தக் கூட்டணியில் இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகள் தான் என்று தெரிவிக்கிறார்கள்.எதிர்க்கட்சியான திமுக இவ்வளவு மெதுவாக செயல்பட்டுக் கொண்டிருக்கையில், ஆளும் கட்சியான அதிமுக அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்பாக முடித்துவிட்டு இனி தேர்தல் அறிக்கை மட்டும் வெளியிட்டால் போதும் என்ற நிலையில் வந்து நிற்கின்றது.

ஆகவே திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகள் அனைத்துமே திமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் காரணத்தால், கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்தாலும் தேர்தலுக்குப் பிறகு அந்த கூட்டணி உறுதியாக இருக்குமா என்பது சந்தேகம் தான் என்று தெரிவிக்கிறார்கள்.அவ்வாறு ஒருவேளை தேர்தலுக்குப் பின்னர் இந்த கூட்டணி உடைந்தால் திமுக ஆட்சிக்கு வந்தாலும் திமுக ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.