திமுகவில் குழப்பத்தை உண்டாக்கிய ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார்! அதிருப்தியில் தங்க தமிழ்செல்வன்

0
212
DMK Durai Murugan and O.P Ravindranath Kumar Meet Issue-News4 Tamil Online Tamil News Channel
DMK Durai Murugan and O.P Ravindranath Kumar Meet Issue-News4 Tamil Online Tamil News Channel

திமுகவில் குழப்பத்தை உண்டாக்கிய ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார்! அதிருப்தியில் தங்க தமிழ்செல்வன்

அரசியலில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எதிரும் புதிருமாக இருந்த அதிமுக மற்றும் திமுகவினர் முன்னாள் தமிழக முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவிற்கு பிறகு ஓரளவு நெருங்கி பழங்க ஆரம்பித்தனர். அந்த வகையில் தான் சமீபத்தில் தேனி மாவட்டத்திற்கு ஆய்விற்காக சென்ற திமுக பொருளாளர் துரைமுருகன் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமாரை சந்தித்து பேசியுள்ளார். இது எதேச்சையாக நடந்த சந்திப்பாக இருந்தாலும் இதையும் தற்போது அரசியலாக்கி திமுகவில் குழப்பதை உண்டாக்கி விட்டார்கள்.

சமீபத்தில் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமாரை திமுக பொருளாளரான துரைமுருகன் சந்தித்து பேசியதை அமமுகவிலிருந்து திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு பிடிக்காமல் புலம்ப ஆரம்பித்து விட்டாராம். இதற்கு முன் அதிமுக மற்றும் அமமுகவில் இருந்து கொண்டு அரசியலில் கோலோச்சிய தங்க.தமிழ்ச்செல்வன் சமீபத்தில் டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அண்மையில் திமுகவில் இணைந்தார்.

இவ்வாறு அதிமுகவிலிருந்து வெளியேறி அமுககவில் கொஞ்சகாலம் செயல்பட்ட இவர் அமமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் தான் மட்டும் இணையாமல் தன்னுடன் தனது ஆதரவாளர்கள் பத்தாயிரம் பேரையும் ஸ்டாலின் முன்னிலையில் இணைத்தார். இந்நிலையில் தான் சட்டசபை பொதுகணக்கு குழுத் தலைவர் என்ற முறையில் தேனி மாவட்டத்திற்கு ஆய்வுக்காக சென்ற திமுக பொருளாளர் துரைமுருகன், அங்கு ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி.யை எதேச்சையாக சந்தித்து பேசினார். இவர்களுடைய இந்தச் சந்திப்பு தான் தங்க.தமிழ்ச்செல்வனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது

அரசியலில் இவரு எவ்வளவு பெரிய சீனியர்..சின்னப்பையனிடம் போய் அரட்டை அடிக்கிறார்” என தனது ஆதரவாளர்களிடம் தங்க.தமிழ்ச்செல்வன் புலம்பி தள்ளியிருக்கிறார்.

துரைமுருகனுடனான சந்திப்பின் போது தங்க தமிழ்ச்செல்வனை வெறுப்பேற்றும் வகையில் வேண்டும் என்றே மீண்டும் மீண்டும்  சிரித்து பேசிக்கொண்டிருப்பது போலவே புகைப்படம் எடுக்க வைத்தாராம் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார். இதன் மூலம் தனது செல்வாக்கு என்ன என்பதை உள்ளூர் அரசியல் எதிரியான தங்க.தமிழ்ச்செல்வனுக்கு புரிய வைத்துவிட்டார் அண்ணன் என்கின்றனர் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார் ஆதரவளர்கள்.

இந்த சம்பவத்தால் ஓ.பி.எஸ். மகன் – துரைமுருகன் சந்திப்பை பற்றி தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்புவதால், அவர்களுக்கு என்ன பதில் கூறுவது எனத் தெரியாமல் தர்மசங்கடத்திற்கு ஆளாகியுள்ளாராம் தங்க தமிழ்செல்வன்.

இதனிடையே எங்களுக்கு கூட அந்தச் சந்திப்பில் உடன்பாடில்லை தான் என்றும், தேனி மாவட்டத்தில் திமுகவை அழிக்க அத்தனை வழிகளையும் அப்பாவும், மகனும் கையாண்டு வருகின்றனர். இருந்தாலும் இதைக் கூட அவர் புரிந்து கொள்ளவில்லையே என துரைமுருகனுக்கு எதிராக தேனி மாவட்ட திமுகவினரும் விமர்சித்து வருகின்றனர். எது எப்படியோ நல்லா இருந்த கட்சியில் குழப்பத்தை உண்டாக்கி விட்டார் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத்குமார். இதுவும் ஒரு வகையான ராஜதந்திரம் தான்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleசூழலியல் செயற்பாட்டாளர் பியூஸ் மனுசைத் தாக்கிய பாஜக நிர்வாகிகளைக் கைது செய்ய வேண்டும் என சீமான் வலியுறுத்தல்
Next article75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி!