தி.மு.க. முன்னாள் அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்

Photo of author

By Parthipan K

திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்த ரகுமான்கான் 1996 இல் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், இரண்டு முறை தமிழக சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைதலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும், 1989 இல் பூங்காநகர் தொகுதியிலும், 1996 இல் இராமநாதபுரம் தொகுதியிலும் வெற்றி கண்டவர்.

இந்நிலையில், இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.