திமுக பைல்ஸ்-2 கவர்னரிடம் ஒப்படைப்பு!! சிக்குவது யார்? யார்? திக் திக் நிமிடங்கள்!!
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் தான் திமுக கட்சியின் அமைச்சர்கள் மற்றும் எம்.பி. க்களின் சொத்து பட்டியல் குறித்து வெளியிட்டார்.
இவர் திமுகவில் உள்ள பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, டி.ஆர் பாலு உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களின் சொத்து பட்டியலையும் வெளியிட்டு அதில் மொத்தமாக திமுக பிரமுகர்களின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 34 ஆயிரமாக உள்ளது என்று கூறி இருந்தார்.
இதனையடுத்து திமுகவின் அடுத்த சொத்து பற்றிய பைல் பாகம் இஅரண்டு தயாராக இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறி இருந்தார். அதில்,
திமுகவினரின் பைல்ஸ் பாகம் இரண்டு தயாராக உள்ளது. இதில் இருப்பது பினாமி சொத்துக்கள். இந்த பினாமிகளின் பெயரை வெளியே கூறி விடுவதா இல்லை ஆளுநரிடம் இதை ஒப்படைத்து விடுவதா?
ஏனென்றால், தமிழகத்தில் சிபிஐ அனுமதியை இவர்கள் எடுத்துக்கொண்டு, சிபிஐக்கு கொடுக்கப்பட்ட அதிகாரங்களை இவர்களே செய்து வருகிறார்கள். முதல்வரின் மீதே சிபிஐ புகார் கொடுத்திருந்தோம்.
அந்த துறையை தற்போது திமுக எடுத்துக்கொண்டதால் முதல்வர் இதிலிருந்து தப்பிக்க முடியாது. எனவே, இந்த பினாமிகளின் பெயர்களை பொதுவாக கூறி விடலாமா? ஆளுநரிடம் ஒப்படைக்கலாமா? அல்லது டிஜிபி இடம் ஒப்படைக்கலாமா? என்று கலந்தாய்வு செய்து வருகிறோம்.
இதனைத்தொடர்ந்து திமுக வின் பைல்ஸ் பாகம் ஒன்றை பொறுத்தவரை 13 பேரின் சொத்து விவரங்களை கூறி உள்ளோம். பாகம் இரண்டில் பினாமிகளின் நில விவரங்கள், அவர்களின் பேரில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் முதலியவை பற்றி கூறி இருக்கிறோம்.
இதற்கு எல்லாம் கண்டிப்பாக ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதையும் நான் பாதயாத்திரை செல்வதற்கு முன்பாக செய்ய வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருந்தார்.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று சந்தித்த பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக பைல்ஸ் 2 என்ற பெயரில் ஏராளமான ஊழல் புகார்களை ஒரு டிரங்க் பெட்டியில் வைத்து வழங்கி உள்ளார்.
அதில் திமுகவின் ஒன்பது அமைச்சர்களின் சொத்து விவரங்கள், அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்த்திருப்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை உள்ளடக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அது யார் யார் என்பது நாளை அண்ணாமலை தொடங்க இருக்கும் பாத யாத்திரையில் கூறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பைல்ஸ் குறித்து கவர்னர் விசாரணை மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.