Uncategorized

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம் காலமானார்!

வேதாரண்யம் தொகுதி முன்னாள் திமுக எம்.எல்.ஏ. மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தொகுதியின் முன்னாள் திமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் மீனாட்சி சுந்தரம். இவர் வேதாரண்யம் தொகுதியில் 1971, 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி கண்டவர். இவர் தற்போது நாகை தெற்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனாட்சி சுந்தரத்திற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மீனாட்சிசுந்தரம் உயிரிழந்தார்.

இவரின் இழப்பு கட்சியின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு திமுக கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். செப்டம்பர் 15ம் தேதி திமுக சார்பில் மீனாட்சி சுந்தரத்திற்கு தந்தை பெரியார் விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment