அதிமுக அரசின் ஊழல் – திமுக கூட்டத்தில் தீர்மானம்

Photo of author

By Parthipan K

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் கூட்டம் நேற்று நடைபெற்றது.

காணொளி காட்சி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கட்சியின் துணை பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட, அந்தியூர் செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

அமைப்புச் செயலர், ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்ட போது, அவருக்கு இடைக்கால பிணையம் கிடைக்க நீதிமன்றத்தில் வாதாடிய கட்சியின் சட்டத்துறையினருக்கும் வாழ்த்து கூறப்பட்டது.

அதிமுக அரசின் ஊழல்களை, மாவட்ட வாரியாக பட்டியலிட, வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்படும் என, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.