மாவீரன் காடுவெட்டி ஜெ குரு குறித்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் வெளியிட்ட சுவாரசிய தகவல்

0
298
Maaveeran Kaduvetti J Guru-News4 Tamil Online Tamil News1
Maaveeran Kaduvetti J Guru-News4 Tamil Online Tamil News1

பாமக சார்பாக ஜெயம்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவரும்,வன்னியர் சங்க தலைவருமான மாவீரன் என்று தமிழக மக்களால் அழைக்கப்படும் காடுவெட்டி ஜெ குரு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு இன்று கடைபிடிக்கபடுகிறது.

அவரது நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் கலைக்கோவன் அவரது முகநூல் பக்கத்தில் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது.

பத்து ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் ,
இருபது ஆண்டுகள் வன்னியர் சங்கத் தலைவராக இருந்தும் தன் ஆளுமையை தவறாக பயன்படுத்தாமல் தனக்காகவோ தன் குடும்பத்திற்காகவோ சொத்து சேர்க்காமல் இறுதிவரை எளிய வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு மறைந்திருக்கிறார் மாவீரன் காடுவெட்டியார் ( நினைவு நாள்- மே 25)

Maaveeran Kaduvetti J Guru News4 Tamil Online Tamil News1
Maaveeran Kaduvetti J Guru News4 Tamil Online Tamil News1

அவர் இறக்கும் போது அவர் வங்கிக்கணக்கில் இருந்தது வெறும் 5000 ரூபாய் மட்டுமே !!! ஆனால் விட்டுச் சென்ற கடன் ஒரு கோடிக்கும் மேல்….
(அவருக்கு சிகிச்சை அளித்த நுரையீரல் மருத்துவர் என்ற முறையில் இந்த உண்மையை நான் அறிவேன்)

அவரை ஜாதி கட்சி தலைவராக மட்டுமே பார்க்கும் மக்களுக்கு நான் கூற விரும்புவது இதுதான் –

இரண்டு கோடி மக்களை உள்ளடக்கிய சங்கத்தின் தலைவராக இருந்தும் , அதன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாதவர் …

அவர் பொறுப்பில் இருந்த வரை ஜாதிக் கலவரங்கள் வடதமிழகத்தில் நடைபெறவில்லை…

முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அம்பேத்கர் அவர்களுக்கு தமிழகம் முழுவதிலும் பாமக சார்பாக அதிக சிலைகளை நிறுவ முழு ஒத்துழைப்பு கொடுத்தவர்…

அரியலூர் மாவட்டத்தில் இரட்டை குவளை முறையை முற்றிலும் ஒழித்தவர் அவர்…

அவர் இறந்தபோது கூடிய கூட்டத்தில் ,அரியலூர் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த எண்ணற்ற தலித் மக்கள் கலந்துகொண்டு அவருக்காக கண்ணீர் வடித்தனர் …

ஒருமுனையில் பசு மாட்டையும் மறுமுனையில் குதிரையையும் கொண்டு சவாரி செய்வது எப்படி சவாலானதோ அதைப்போல்,
இடதுசாரிக் கொள்கை உடைய பாமகவிற்கு அரணாகவும், வலதுசாரி ஜாதிய சங்கத்தின் தலைவராகவும் அவர் ஆற்றிய பணி நமது கற்பனைக்கு எட்டாதவை…

வரலாற்றில் இடம் பிடித்த அந்த போராளிக்கு நமது வீர வணக்கத்தை செலுத்துவோம் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

author avatar
Ammasi Manickam