திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!!

Photo of author

By Divya

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!!

Divya

Updated on:

திமுக அரசால் தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது – எடப்பாடியார் விமர்சனம்..!!

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாளர் கல்லூரியில் அந்நிறுவன தாளாளர் துரைசாமி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட சிலையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார்.

அதன் பின்னர் விழா மேடையில் மாணவர்கள் முன்னிலையில் பேசிய எடப்பாடியார், மாணவர்களுக்கு அவர்களது வாழ்வில் கல்வி முக்கியமான ஒன்று. ஒருவரிடம் இருக்கும் கல்வி என்ற செல்வத்தை எவராலும் பறிக்க முடியாது. இப்படிப்பட்ட கல்வி வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர் துரைசாமி கவுண்டர் என்று பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பெண்களுக்கு சிறப்பான கல்வி, ஊக்கத் தொகை உள்ளிட்ட கல்வி தொடர்பான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து சிறப்புடன் செயல்படுத்தியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதிமுக ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கப்பட்டது. அவர்கள் ஒழுக்கத்தை கற்று அடுத்தடுத்து முன்னேற்றத்தை காணத் தொடங்கினர்.

ஆனால் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் திமுக அரசால் தமிழகத்தில் போதை பொருள் ஊடுருவல் தலை விரித்தாடுகிறது. இதனால் தற்பொழுது தமிழகம் போதை மாநிலமாக உருவெடுத்து விட்டது. இது போன்ற ஒழுக்கமற்ற பழக்கத்திற்கு மாணவர்கள் அடிமை ஆகாமல் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.