எழுத்தாளர்களை அவமதிக்கும் திமுக அரசு!! அதிருப்தி கொண்ட கவிஞர்கள்!!

Photo of author

By Gayathri

எழுத்தாளர்களை அவமதிக்கும் திமுக அரசு!! அதிருப்தி கொண்ட கவிஞர்கள்!!

Gayathri

DMK government insults writers!! Disgruntled Poets!!

சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கக்கூடிய புதிய திட்டத்தினை முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் 97 வது பிறந்த நாளான 2021 ஆம் ஆண்டு துவங்கி வைத்தார்.

அன்றிலிருந்து இன்று வரை இத்திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்பட்ட எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களில் சிலருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீடுகளின் அரசாணைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்களில் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் எழுத்தாளரான ராஜேந்திரன், ஐபிஎஸ் அதிகாரி திலகவதி, கவிஞர் மு மேத்தா மற்றும் வைரமுத்து ஆகியோர்களுக்கு சில காரணங்களை குறிப்பிட்டு அந்த அரசாணையானது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சாகத்திய அகடமி விருது பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மற்றும் எழுத்தாளரான மூ இ ராஜேந்திரன் தெரிவித்திருப்பதாவது :-

எழுத்தாளர்களை கௌரவ படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின் ஆரம்பத்தில், எழுத்தாளர்கள் சொந்தமாக வேறொரு வீடு வைத்திருந்தாலும் இத்திட்டத்தின் மூலம் பயன்படலாம் எனக் கூறி வீடுகளுக்கான அரசாணைகள் வழங்கப்பட்டதாகவும் அதன் பின், அரசாணையில் திருத்தங்களை கொண்டு வந்து தற்போது தமிழ்நாடு வீட்டு வாரியத்தின் கீழ் வீடு வாங்கி இருப்பவர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க முடியாது எனக்கு ஒரு அரசாணையை ரத்து செய்திருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.

மேலும், அவருக்கு வருத்தம் அளிப்பதாக இருக்கக்கூடிய விஷயம், தமிழக அரசினுடைய இந்த திட்டமானது குழப்பமான முடிவுகளால் சர்ச்சையாக்கி உள்ளது தான் என தெரிவிக்கிறார்.

மேலும் இந்த திட்டம் குறித்து யுவபுரஸ்கார் விருது பெற்ற சிறார் எழுத்தாளர் மற்றும் ஹைக்கூ கவிஞரான முருகேஷ் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-

முருகேஷ் அவர்கள் கூறுகையில், யுவபுரஷ்கார் விருது பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூறியதால் தான் தானும் விண்ணப்பித்ததாகவும் அதன்பின், அரசாணையை திருத்தி இவர்களுக்கு தகுதி இல்லை என கூறியிருப்பது எழுத்தாளர்களை அவமதிப்பது போல் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் கூறியவர், துணை பிரிவுகளின் கீழ் எழுத்தாளர்களுக்கு தகுதி இல்லை என்று கூறிவிட்டு மொழிபெயர்ப்பாளர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்படுவது என்பது வருத்தமளிக்கும் விஷயமாக உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசினுடைய இந்த திட்டமானது தற்பொழுது எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை விரக்தி அடைந்து செய்யும் விஷயமாகவே உள்ளது. தெளிவான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இத்திட்டத்தை செயல்முறைப்படுத்தி இருக்கலாம் ஆனால் அதையும் செய்யாமல் அதில் செய்யப்படக்கூடிய திருத்தங்களையும் சரிவர செய்யாமல் இருப்பது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்குவதாக அமைந்துள்ளது என எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள் தெரிவித்திருக்கின்றனர்.