அது அயோக்கியத்தனம் என்றால் இது என்ன? எதிர்க்கட்சித் தலைவர் விளாசல்!

Photo of author

By Sakthi

சென்ற ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தன்னுடைய இறுதி நாளை எட்டியிருக்கிறது.தமிழக சட்டசபை கூட்டம் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வழக்கமாக நடைபெறும். ஆனால் தற்சமயம் நோய்த்தொற்று பரவல் அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக, சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் 7ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதும் இதே கலைவாணர் அரங்கத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் பல விதமான விவாதங்கள், குற்றச்சாட்டுகள் சட்ட மசோதாக்கள் என்று கடந்த ஒரு வார காலமாக சட்டப்பேரவையில் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டு வந்தது. இதில் அமைச்சர்கள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைவரும் அவரவர் பங்குக்கு காரசாரமான விவாதங்களை நடத்தி வந்தார்கள். முதலமைச்சர் சார்பாக பல அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டது அதற்கு எதிர் கட்சியினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது உள்ளிட்ட மிக சுவாரசியமான சம்பவங்களும் நடைபெற்று வந்தன.

இந்த சூழ்நிலையில், சட்டசபையின் இறுதி நாளான இன்றைய தினம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதா மற்றும் வாணியம்பாடி படுகொலை குறித்த விவாதம் எழுந்தது. அந்த சமயத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தீர்கள். நீட் தேர்வு ரத்து செய்யப்படாத காரணத்தால் நேற்றைய தினம் ஒரு மாணவர் உயிரிழந்து இருக்கின்றார் என்று கூறியிருக்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி. இதற்கு பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சமயத்தில் கூட நீட்தேர்வு தமிழகத்திற்குள் நுழைய முடியவில்லை. நீங்கள் முதலமைச்சராக இருந்த சமயத்தில்தான் இந்த நீட் தேர்வு தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது என்று ஸ்டாலின் கூறினார் இதனை தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வந்தது. அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள்.

சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநடப்பு செய்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடியில் கஞ்சா விற்பனை நடந்ததை சுட்டிக்காட்டிய சமூக ஆர்வலர்கள் சமூக விரோதிகள் ஒருசிலர் பலி கொண்டார்கள் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இறந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும் அவருடைய குடும்பத்தின் தகுதியான ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம் என தெரிவித்திருக்கிறார்.

ஆளுங்கட்சியான திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறியிருந்தது ஆனால் ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை தெளிவான முடிவை எடுத்து அறிவிக்காததன் காரணமாக, நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பத்திலேயே மாணவர்கள் தற்சமயம் நீட் தேர்வை எழுதி இருக்கிறார்கள். என்று தெரிவித்திருக்கிறார் பயம் காரணமாக மீண்டும் தனுஷ் எனும் மாணவர் தற்கொலை செய்து கொண்டார் அந்த மாணவர் உடைய இழப்புக்கு முழுக்க முழுக்க திமுகதான் காரணம் என குற்றம் சாட்டி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

ஜெயலலிதா மறைந்த பின்னர் கூட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக தலைமையிலான அரசு சட்ட போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வந்தது. உச்சநீதிமன்றமும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்று இறுதிகட்ட தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக யாராவது செயல்பட இயலுமா? நீட் தேர்விற்கு எதிராக அதிமுக தீர்மானம் கொண்டு வந்த சமயத்தில் அது அயோக்கியத்தனம் என்று திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராசா தெரிவித்தார் இப்போது திமுக கொண்டுவரும் தீர்மானத்திற்கு அவருடைய கருத்து பொருத்தம் ஆகுமா என்று எடப்பாடி பழனிச்சாமி விளாசினார்.