சென்னை: தற்போது மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் அவர்கள் 500 அரசு பள்ளிகளை தனியாருக்கு பள்ளிகளோடு இணைக்கும் முயற்ச்சியை கைவிட வேண்டும் என கூறி அறிக்கை மூலம் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த அறிக்கை திமுக அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் மகேஷ் கூறியதாவது: அரசு பள்ளிகளை தனியாருக்கு தத்துக்கொடுப்பதாக நான் பேசினேனா? செய்திகளின் உண்மை தெரியாமலேயே அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுவதா? தவறாக புரிந்து கொண்டு தாரை வார்ப்பு என விமர்சனங்கள் செய்கின்றனர். அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதாக வெளியான செய்திகளை வன்மையாக கண்டிக்கிறேன். அரசு பள்ளி விவகாரத்தில் எனது தரப்பு விளக்கங்களை கேட்காமல் கண்டனம் தெரிவிக்கின்றனர். அரசு பள்ளிகள் எங்கள் பிள்ளை அதை யாருக்கும் தத்து கொடுக்கவில்லை. 500 அரசு பள்ளிகளை தாரை வார்த்து கொடுப்பதாக பரவும் தகவல் தவறானது. சி.எஸ்.ஆர்., நிதி மூலம் மட்டுமே அரசு பள்ளிகளை மேம்படுத்த தனியார் பள்ளிகள் முன் வந்தன.
அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மத்திய அரசு நிதி கொடுக்காமல் கழுத்தை நெரிக்கிறது. மிரட்டல் விடுக்கிறது. மத்திய அரசின் கொள்கைகளை ஏற்றுக்கொணடால் தான் நிதி தருவோம் என மிரட்டல் விடுக்கிறார்கள். எங்கள் கொள்கைகளில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றி விடுங்கள். எங்கள் பிள்ளைகளை நாங்களே பார்த்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். அதில் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் எந்த ஒரு கட்சி பெயரோ அல்லது தலைவரின் பெயரோ குறிப்பிட்டு கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரது கூட்டணி கட்சிதான் ஆட்சியில் இருப்பதால் அமைச்சர் மகேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைதளத்தில் இந்த விவாதம் பேசும் விதமாக உள்ளது.