தமிழக மக்களை இந்த விசயத்தில் ஏமாற்றி விட்டது திமுக! எதிர்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டு!

0
118
DMK has deceived the people of Tamil Nadu in this matter! Opposition leader's accusation!
DMK has deceived the people of Tamil Nadu in this matter! Opposition leader's accusation!

தமிழக மக்களை இந்த விசயத்தில் ஏமாற்றி விட்டது திமுக! எதிர்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டு!

சேலம் மாவட்டத்தில், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜலகண்டபுரத்தில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் 100 பேருக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் வழங்கும் வகையில், அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது இவ்வாறு கூறினார்.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றி விட்டது என்றும், அமைச்சர் மா. சுப்பிரமணியம் குற்றம்சாட்டியது போல தடுப்பூசிகள் வேண்டுமென்றே வீணடிக்கப்படவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் மட்டுமே மருந்துகள் வீணாகின. மூன்றாம் அலையில் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து தமிழக அரசு பெறவேண்டும்.

சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நான் ஏற்கனவே பலமுறை கூறியுள்ள நிலையில், அவர் வேண்டுமென்றே பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். எம்ஜிஆருக்கு அரசியல் ஆலோசனை வழங்கியதாக கூறிய சசிகலா எத்தனை பொய்யான தகவல்களை பரப்பி வந்தாலும், அதிமுகவை அழித்துவிட முடியாது.

சசிகலா அதிமுகவில் இருந்த காலத்திலும் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார். மேலும் மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். எனவே நதிநீர் பங்கீடு தொடர்பான சுப்ரீம் கோர்ட் கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே அணைகள் தடுப்பணைகள் கட்ட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

Previous articleநாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பிரதமர் உரை! எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செய்த அட்டகாசம்!
Next articleசின்னத்திரை சித்ராவை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது!! மனமுடைந்த ரசிகர்கள்!!