தமிழ் நாட்டில் திமுகவை பொறுத்தவரையில் தற்போது நடந்த சட்டசபை தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறது. அதற்கு காரணம் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான அந்த ஐபேக் குழுதான் என்று சொல்கிறார்கள்.
அந்தக் குழுவை சார்ந்த நபர்கள் தமிழகத்தில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் அவர்கள் ஏற்கனவே அந்த கட்சியின் தலைமை மூலமாக கொடுக்கப்பட்ட அறிக்கையை கையில் வைத்துக்கொண்டு திமுகவிற்கு சாதகமானவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து விட்டார்களா? அவர்கள் வாக்கு செலுத்தி விட்டார்களா? என்று கவனித்து அவர்கள் வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடி விட்டு வெளியே வந்தவுடன் அவர்களுடன் சூசகமாக பேச்சுக் கொடுத்து எந்த சின்னத்திற்கு வாக்களித்தார்கள் என்பதனை தெரிந்து கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இப்படி தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் அதற்கு இருக்கும் வாக்குச்சாவடிகளுக்கு இந்த குழுவைச் சார்ந்த நபர்கள் சென்று கண்காணித்து ஆங்காங்கு ஏற்கக்கூடிய களநிலவரங்களை சேகரித்து பிரசாந்த் கிஷோர் இடம் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.அதன் அடிப்படையில்தான் பிரசாந்த் கிஷோர் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினிடம் மிக உறுதியாக இந்த முறை தாங்கள் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று தெரிவித்து சென்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அதனடிப்படையில் பிரசாந்த் கிஷோர் இடம் இருந்து கடைசியாக ஸ்டாலினுக்கு வந்த அறிக்கையில் தமிழகத்தில் இருக்கும் 234 சட்டசபை தொகுதிகளில் 205 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த அறிக்கையின் அடிப்படையில் தான் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொடைக்கானல் சென்று அங்கே வியூகங்களை வகுத்து வருகிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.