இரவு நேர ஊரடங்கால் பேருந்துகளுக்கு ஏற்பட்ட அவலம்!

0
89

தமிழ அரசு சார்பாக தற்சமயம் விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, உணவக தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று உணவக தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது.உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் இதற்கு முன்னரே 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட இருக்கின்ற நிலையில், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்து வருவது, கைகளை கழுவுவது, இடைவெளியை கடைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளை பின்பற்றுவதை உணவக உரிமையாளர்கள் உறுதியாக கண்காணிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் வரும் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அமலுக்கு கொண்டுவரப்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதோடு வார இறுதியில் முழு ஊரடங்கு அமல்படுத்துவதால் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், 12:00 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரையிலும், உணவகங்களின் வாசலுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.. அதேபோல இணையதள உணவு டெலிவரி நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக சென்னை உணவகங்கள் சங்கத்தலைவர் ரவி தெரிவித்ததாவது, சென்ற வருடம் போடப்பட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக, எங்களுடைய தொழில் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது தான் எங்களுடைய தொழில் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருகிறது.இந்த நேரத்தில் மீண்டும் இவ்வாறு கட்டுப்பாடுவிதிப்பது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.வாடகை செலுத்துவது வங்கி கடன் செலுத்துவது, ஊதியம் தருவது, போன்றவைகள் எங்களுக்கு சிரமமாக உள்ளது என தெரிவித்திருக்கிறார்.இரவு நேர ஊரடங்கு போடப்பட்டிருப்பதால் வெளிமாநில,மாவட்டத்திற்கு செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லை என தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்ததாவது,கடந்த பிப்ரவரி மாதத்தில் தான் 650 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதற்குள் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக, மக்களின் பயணம் குறைந்து வருகின்றனர்.நேற்று வெறும் 180 பேருந்துகள் தான் இயக்கப்பட்டன. தற்சமயம் இரவில் ஊரங்கு வார இறுதி ஊரடங்கு போன்றவைகளால் மக்கள் பயணம் மேலும் குறையும் என தெரிவித்திருக்கிறார்.

பொதுவாக இரவு நேரங்களில் தான் மக்கள் அதிகமாக பயணம் மேற்கொள்வார்கள் அருகில் இருக்கின்ற பகுதிகளுக்கு தான் பகல் நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மிகத் தொலைவில் இருக்கின்ற பகுதிகளுக்கு இரவு நேரத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்க முடியும். அரசின் தற்போதைய அறிவிப்பு காரணமாக தனியார் பேருந்துகளை முற்றிலுமாக நிறுத்தும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறார் அன்பழகன் .