நமக்கு எதிரி திமுக மட்டும் தான் – முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேச்சு!!

0
118
#image_title

நமக்கு எதிரி திமுக மட்டும் தான், அனைவரும் ஒன்றாக செயல்பட்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும்-முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேச்சு.

திருப்பூர் மாநகர மாவட்ட கழகத்தில் திருப்பூர் வடக்கு,தெற்கு மற்றும் காங்கேயம் சட்டமன்ற தொகுதிகளுக்கான நகர, ஒன்றிய, பேரூராட்சி பகுதிகளில் உள்ள நிர்வாகிகளுக்கு இளைஞர், இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு, பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா, மண்டல பொறுப்பாளரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையிலும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக தேர்தல் பிரிவு சிறப்பு செயலாளருமான பொள்ளாச்சி.வ.ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், இது ஒரு எழுச்சியான கூட்டமாக உள்ளது. மகளிர்க்காக அதிகளவிலான திட்டங்கள் தந்த ஒரே கட்சி அதிமுக மட்டும்தான். 18 லட்சம் உறுப்பினர் கொண்டு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கட்சியை தொடங்கினார். பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்கு தந்துள்ளார். சத்துணவு திட்ட மூலம் பலர் பயின்று இன்று மருத்துவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற துறையில் சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாட்டின் உரிமையை மீட்டெடுத்த ஒரே தலைவி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மட்டும்தான். அம்மா மறைந்தாலும் அவர்களை திட்டங்கள் அனைத்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அம்மாவின் மறைவுக்குப் பிறகு ஆறு மாசத்தில் கட்சி கலைந்து விடும் ஒரு வருஷத்தில் கட்சி காணாமல் போய்விடும் என்று சொன்னவர்கள் மத்தியில் விவசாய குடும்பத்தில் இருந்து வந்த எடப்பாடி யார் அவர்கள் மக்களின் கஷ்டங்களை உணர்ந்து அவர்களை தேவையான பல்வேறு திட்டங்களை தந்து கட்சியை சிறப்பான முறையில் நடத்தி வந்தார்.

ஐம்பதாண்டு வளர்ச்சி திட்டங்களை கடந்த நான்கரை ஆண்டில் கொடுத்துள்ளோம். குடிநீர் திட்டம் பேருந்து நிலையம் உள்ளிட்டவைகளுக்கு நிதி ஒதுக்கியது அதிமுக ஆட்சி ஆனால் பெயரோ கருணாநிதி பெயர். 75 ஆண்டு கால ஆட்சியில் வராது என்று நினைத்ததை அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை உருவாக்கியுள்ளார். எதுவுமே மக்களுக்கு செய்யாமல் இந்தியாவிலேயே முதன்மை முதலமைச்சர் மு க ஸ்டாலினாக தான் இருக்க முடியும். ஏழை எளிய மக்கள், அரசு ஊழியர் என்று யாருமே இந்த ஆட்சியில் நன்றாக இல்லை.

75 ஆண்டு கால ஆட்சியில் வராது என்று நினைத்ததை அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை உருவாக்கியுள்ளார். ஆனைமலை நல்லாறு திட்டத்திற்கு கேரளா சென்று கூட்டு கமிட்டி அமைக்க முயற்சி செய்தோம். நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று கூறி உதயநிதி ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார்.மாற்று வழி என்னவென்று சிந்திக்க கூடியவர் எடப்பாடியார். கட்சியில் பல துரோகிகள் கட்சிக்குள்ளிருந்து திமுகவிற்கு செயல் பட்டனர்.

எந்த திட்டமும் தராமல் ஆட்சி நடத்தக்கூடிய ஒரே முதல்வர் ஸ்டாலின். ஸ்டிக்கர் ஒட்டி அனைத்து திட்டங்களையும் திமுக திறந்து வைக்கின்றனர். இந்த ஆட்சியில் யாரும் நன்றாக இல்லை.12 மணி நேர வேலையை கடுமையாக எடப்பாடி எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அச்சட்டம் திரும்ப பெறப்பட்டது. எங்கு பார்த்தாலும் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. அதேபோன்று கொரோனா காலகட்டத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்ட ஒரே முதல்வர் எடப்பாடியார் அவர்கள் மட்டும்தான். எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

மீண்டும் அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமையும். பல்வேறு கமிட்டிகளை அமைத்து இரண்டு கோடி தொண்டர்களை உறுப்பினராக சேர்க்க வேண்டும். சாதாரண கிளைச் செயலாளராக இருந்து இன்று முதல்வரானவர் எடப்பாடியார் அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் எனவே அனைவரும் அயராது உழைத்திட வேண்டும். வீடு வீடாகச் சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்த வேண்டும். பூத் கமிட்டி அமைத்து ஒரு கமிட்டி புதிதாக அமைத்து கண்காணிக்க வேண்டும். குறிப்பாக திருப்பூர் தெற்கு தொகுதியில் ஒரு லட்சம் உறுப்பினர் சேர்க்கை நடத்திட வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்தார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கோவை மண்டலத்துக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும் வெற்றி பெறுவதோடு 40 மண்டலங்களிலும் சிறப்பாக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியார் முதல்வர் ஆவார். நமக்கு எதிரி திமுக மட்டும் தான் எனவே நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற வேண்டும் என்று பேசினார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முன்னதாக 100-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த இளைஞர், இளம்பெண்கள் வேலுமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

author avatar
Savitha