திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் ஆலோசகரையே தூக்கிய பாமக நிறுவனர் ராமதாஸ்!

Photo of author

By Parthipan K

திமுக தலைவர் ஸ்டாலினின் அரசியல் ஆலோசகரையே தூக்கிய பாமக நிறுவனர் ராமதாஸ்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் ஆலோசகராகவும், அரசியல் திட்டமிடல் குழுவை வழிநடத்துபவராகவும் இருந்த சுனில் என்பவர் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முறைப்படி மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து தனது பதவி ராஜினாமா குறித்து தெரிவித்துவிட்டு அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஸ்டாலினின் அரசியல் ஆலோசகராக இருந்த சுனில் பதவி விலகல் குறித்த செய்தி நேற்றிரவு முதல் திமுக வாட்ஸ் அப் குரூப்களில் பரவ, அதை பார்த்து விட்டு திமுகவை சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

DMK IT Wing OMG Group head Sunil resigned by Dr Ramadoss -News4 Tamil Latest Online Political Tamil News
DMK IT Wing OMG Group head Sunil resigned by Dr Ramadoss -News4 Tamil Latest Online Political Tamil News

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அரசியல் செயல்பாட்டிற்காக அரசியல் திட்டமிடல் குழுவை உருவாக்கி அதை முறையாக வழி நடத்தி வந்தவர் தான் சுனில் என்பவர். கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்காக பிரஷாந்த் கிஷோர் டீமில் பாஜகவுக்கு ஆதரவாக பணியாற்றிய அவர், பின்னர் 2015 ஆம் ஆண்டு முதல் மு.க.ஸ்டாலினுடன் அரசியல் திட்டமிடலுக்காக இணைந்தார். ஓ.எம்.ஜி. எனப்படும் ஒன் மேன் குரூப் அமைப்பைத் தொடங்கி அதை முறையாக வழிநடத்தி வந்தார்.

இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்காக அரசியல் திட்டமிடல் பணிகளை செய்து வந்த அவர், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நமக்கு நாமே என்ற முழக்கத்துடன் ஸ்டாலினை தமிழகம் முழுவதும் சுற்றி வர வைத்து மக்களை சந்திக்க வைத்தார். இந்த நமக்கு நாமே பயணத்தை மக்களும் எதிர்க்கட்சிகளும் நாடகமாக பார்த்தாலும் திமுகவினர் மத்தியில் ஸ்டாலின் மீது ஓரளவு நம்பிக்கை ஏற்பட உதவியது என்றே கூறலாம். மேலும், ஸ்டாலினின் இமேஜை உயர்த்தும் வகையில் தொடர்ந்து அவர் பல காரியங்களை சிறப்பாக செய்து வந்தார்.

இதன் மூலமாக தான் திமுக மீதான கடந்த கால குற்றசாட்டுகளை எல்லாம் மறந்துவிட்டு மக்களவை தேர்தலில் மக்கள் அவர்களுக்கு ஆதரித்தனர். இதனிடையே இவ்வாறு சிறப்பாக செயல்பட்ட சுனில் நேற்று ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகின.இதற்கு காரணம் பஞ்சமி நில விவகாரத்தில் தலைவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதே இந்த சுனில் தான். இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தலைவரை சம்பந்தமேயில்லாமல் அசுரன் படத்தை பார்க்க சொல்லி, அதன் மூலமாக பஞ்சமி நிலம் பற்றி ட்வீட் போட்டு தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தினார். இதனால் அவருக்கும் தலைமைக்கும் மனவருத்தம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இவரின் ஆலோசனையில் திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்ட அந்த ட்விட்டுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முரசொலி அலுவலகம் அமைந்துள்ளதே பஞ்சமி நிலம் தான், அதை முதலில் உரிவரிடம் சேருங்கள் என விமர்சனம் செய்ய தற்போது அது நீதி மன்ற வழக்கு வரை திமுகவை இழுத்து சென்றுள்ளது. ஏற்கனவே அதிமுகவை விட பாமக திமுகவை பரம எதிரியாக நினைத்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் பஞ்சமி நில விவகாரத்தில் ஸ்டாலினே தானாக ராமதாசிடம் மாட்டி கொண்டதாக தான் திமுக தொண்டர்களே புலம்பி வருகிறார்கள்.

இந்நிலையில் பஞ்சமி நில விவகாரத்தில் தலைவரை பாமக நிறுவனரிடம் சிக்க வைத்தது இந்த சுனில் தான் என திமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுனில் ராஜினாமா செய்துவிட்டார் என தகவல் பரவத்தொடங்கியதும் அதை வெடி வெடித்து கொண்டாடத குறையாக மாவட்டச் செயலாளர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.