நம் அனைவருக்கும் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் தெரிந்த நெப்போலியன் அவர்களின் உண்மையான முகம் இதுதான் என்று உடைத்துக் கூறி இருக்கிறார் திருச்சி சூர்யா அவர்கள்.
நெப்போலியன் குறித்து திருச்சி சூர்யா குமுதம் ரிப்போர்ட்டர்ஸ் youtube சேனலுக்கு பேட்டியளித்து இருப்பதாவது :-
நெப்போலியனை விமர்சனம் செய்ய வேண்டிய தேவை எனக்கு இல்லை என தொடங்கியவர், அவர் ஒன்றும் சிறந்த மனிதரோ அல்லது நல்ல மனிதரோ கிடையாது என்று தெரிவித்திருக்கிறார்.
கே என் நேருவின் அக்கா மகன் தான் நெப்போலியன். கே என் நேரு ஒரு சமயம் பாரதிராஜாவை சந்திக்க சென்ற பொழுது, நெப்போலியன் திரைக்கு கொண்டுவரும் நோக்கில் பாரதிராஜாவிடம் பேசியதோடு மட்டுமல்லாமல் வி பி துரைசாமி மூலம் இயக்குனர் பாரதிராஜா அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து முதல் முதலில் நெப்போலியனை சினிமா துறைக்கு அறிமுகப்படுத்தியவர் கே என் நேரு ஆவார்.
சினிமா துறை மட்டும் இன்றி அரசியலிலும் திமுகவின் உறுப்பினராக நெப்போலியனை சேர்த்தவர் கே என் நேரு. இவ்வாறு நெப்போலியன் உடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த கே என் நேருவிற்கு துரோகம் செய்தவர் நெப்போலியன் என்று கூறுகிறார் திருச்சி சூர்யா அவர்கள்.
அதற்குக் காரணம், இவர் நடித்த பொழுது அல்லது அரசியலில் நுழைந்த பொழுதோ பெரிதாக சம்பாதிக்கவில்லை. எனவே நண்பரிடம் கடன் வாங்கி ஒரு ஐடி கம்பெனியை ஆரம்பித்திருக்கிறார். அதன் மூலம் எதிர்பாராத விதமாக பணம் கொட்டியதை அடுத்து, திமுகவிடம் சென்று தனக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் அதற்காக தான் 50 கோடி ரூபாய் பணம் கொடுக்கிறேன் என்றும் கலைஞரிடம் தெரிவித்திருக்கிறார் நெப்போலியன்.
அதே பதவிக்கு கே என் நேரு அவர்களும் தன்னுடைய தம்பி ராமஜெயம் என்பவருக்காக பரிந்துரை செய்து இருக்கிறார். கலைஞரோ கோபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் அரசியலில் இருக்க வேண்டுமா? என்று கூறி, எம்பி பதவினை நெப்போலியன் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். தொடர்ந்து எம்பி பதவியை வகிப்பதற்காக மீண்டும் திமுகவிற்கு 100 கோடி ரூபாய் பணம் கொடுத்து இருக்கிறார் நெப்போலியன்.
தான் ஆட்சி காலத்தில் இருந்த நாலரை ஆண்டுகளில் தொகுதியின் பக்கமே இவர் செல்லவில்லை என்றும், அரசியலின் மூலம் பல்லாயிரம் கோடி பணத்தினை சம்பாதித்ததாகவும் திருச்சி சிவா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதனால் பலரும் கேள்விகளை கேட்க தொடங்கிய பொழுது, தன்னுடைய குடும்பத்தை கூட்டிக்கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகி இருக்கிறார். அதற்காகத்தான் திமுகவிலிருந்து பாரதிய ஜனதா கட்சிக்கு இவர் தாவியதாகவும், அதற்கு காரணம் மாநில கட்சியில் இருந்தால் அதிக அளவு பணத்தை எடுத்துக் கொண்டு நாடு விட்டு நாடு செல்வது என்பது சிக்கலான விஷயம் என்பதால், தேசிய கட்சிக்கு இவர் மாறி இருக்கிறார் என்றும் திருச்சி சூர்யா அவர்கள் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவிற்கு சென்றதற்கான காரணமாக நெப்போலியன் அவர்கள் தெரிவித்தது தன்னுடைய மகன் தனுஷ் அவர்களின் தசை சிதைவு காரணமாகத்தான் சிகிச்சை அளிப்பதற்கு அமெரிக்காவிற்கு வந்தோம் என்று அனைவரையும் நம்ப வைத்ததாகவும் திருச்சி சூர்யா அவர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்.