திமுக நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கலைக்க முடியும்! திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேச பேச்சு

0
122

திமுக நினைத்தால் ஒரு நிமிடத்தில் ஆட்சியை கலைக்க முடியும்! திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேச பேச்சு

திமுகவினர் நினைத்தால் ஒரு நிமிடத்தில் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியும். ஆனால், கருணாநிதியின் கொள்கையால் நாம் அவ்வாறு செய்யாமல் இருந்துவருகிறோம் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

வேலூரில் திமுகவினர் வாக்குக்கு பணம் கொடுத்ததாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கபட்ட பின் தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்ட தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று மீண்டும் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து, அணைக்கட்டு பகுதிகளில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மத்தியில் உள்ள மோடி ஆட்சியும் மாநிலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி ஆட்சியும் மக்களைப் பற்றி கவலைப்படவே இல்லை. பாஜகவைத் தமிழகம் புறக்கணிப்பதால் நம் தாய் மொழியான தமிழை அழிக்க பாஜக அரசு திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. அதற்காகவும் மக்கள் பிரச்னைகளுக்காகவும் திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

மேலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவே இல்லை. தேர்தல் முடங்கிப்போய் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத காரணத்தால் மக்களின் அடிப்படை பிரச்னைகள் அதிமுக ஆட்சியில் தீர்க்கப்படாமல் உள்ளன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல துண்டுகளாக உடைந்துள்ளது. நாம் நினைத்தால் ஒரு நிமிடத்தில் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியும். ஆனால், கருணாநிதியின் கொள்கையால் நாம் அவ்வாறு செய்யாமல் இருந்துவருகிறோம். குறுக்கு வழியில் வரக் கூடாது என்று கருணாநிதி நமக்கு பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறார்.

கருணாநிதி ஐந்து முறை முதல்வராக இருந்திருக்கிறார். அப்போதெல்லாம் பெண்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மை மக்கள் என அனைத்து  தரப்பினருக்கும் உதவும் கரங்களாக இருந்தார். ஆனால், இப்போது இருக்கும் எடப்பாடியோ உதவாக்கரையாக இருக்கிறார்” என்று மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleஅன்புமணி! திருமா ! யாருடைய கோரிக்கையை ஏற்பார் மோடி?
Next articleH.ராஜா காட்டம்! மதமாற்ற கைக்கூலி பா.இரஞ்சித் படத்தை புறக்கணியுங்கள்!