எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கும் ஸ்டாலின் விரக்தியில் திமுக தொண்டர்கள்

0
528

எதிர்க்கட்சி தலைவர்களை தொடர்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிக்கும் ஸ்டாலின் விரக்தியில் திமுக தொண்டர்கள்

மத்தியில் ஆளும் பாஜக அரசின் 5 ஆண்டு கால ஆட்சி நிறைவடைவதையடுத்து மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் நாடு முழுவதும் பல கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் தேதி அறிவித்தது முதல் தமிழக அரசியல் களம் மிகவும் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தது.இதில் அனைவரின் எதிர்பார்ப்பையும் மீறி அதிமுக,பாமக மற்றும் பாஜக கூட்டணி அமைந்தது தமிழக அரசியலை திசை திருப்பியது.அதுவரை நம்பிக்கையாக இருந்த திமுக காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளுக்கும்,அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற தினகரன் அணியினருக்கும் பாமகவின் இந்த கூட்டணி முடிவு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது முக்கியமானது.

கடந்த தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு 5 சதவீத வாக்குகளை பெற்று தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவிற்கு அடுத்த பெரிய கட்சி பாமக தான் என்பதை நிரூபித்தது. இந்த நிலையில் வழக்கம் போல அந்த கட்சி தனித்து போட்டியிட்டால் அதிமுகவில் உள்ள உட்கட்சி பிரச்னையால் 40 தொகுதிகளிலும் சுலபமாக வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் திமுக தலைவர் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தார்.

திடீரென்று அதிமுக,பாமக மற்றும் பாஜக கூட்டணி அமைந்ததும் அதை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் தான் ஒரு முக்கிய கட்சியின் தலைவர் என்பதையும் மறந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை தரக்குறைவான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்திருந்தார். ஏற்கனவே பொது மேடைகளில் தொடர்ந்து உளறி கொண்டிருந்த ஸ்டாலினின் மருத்துவர் ராமதாஸ் மீதான இந்த விமர்சனத்தை கட்சி பாகுபடின்றி அனைவரும் கண்டித்தனர்.முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி அளவிற்கு ஸ்டாலினுக்கு சகிப்பு தன்மையோ, கட்சியை வழி நடத்தும் திறமையோ இல்லை என அனைவரும் விமர்சனம் செய்து வந்தனர்.

இதன் பிறகும் தன்னை மாற்றி கொள்ளாமல் விரக்தியில் ஆளும் கட்சியின் கூட்டணி தலைவர்களை தொடர்ந்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வந்தார். அந்த வகையில் தற்போது பாஜகவை சேர்ந்த ஹெச் ராஜா அவர்களையும் விமர்சித்துள்ளார். சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பா சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரம் அவர்களை ஆதரித்தும்,மானாமதுரை சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்தும்  திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அங்கு அவர் பேசியதாவது, கார்த்தி சிதம்பரத்தை வாரிசு அடிப்படையில் நிறுத்தியதாக ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள் ஆனால் கார்த்தி சிதம்பரம் தகுதியின் அடிப்படையில் தான் நிறுத்தபட்டுள்ளார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிடும் ஹெச் ராஜாவை நான் வேட்பாளராக பார்க்கவில்லை. தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே இதுபோன்று ஒரு கடைந்தெடுத்த அயோக்கிய அரசியல்வாதியை இதுவரையில் நாம் பார்த்திருக்க முடியாது.

இனிமேலும் பார்க்கவும் முடியாது. தமிழ் சமூகத்தின் அமைதியையும், நிம்மதியையும் கெடுக்கும்  வகையில் பேசுவது, வாய்க்கு வருவதையெல்லாம் உளறுவது, பொய் பேசுவது, அவதூறு கிளப்புவது, வன்முறையைத் தூண்டுவது போன்ற அராஜக செயல்களை மட்டும் தான் இவர் தொழிலாகச் செய்து வருகிறார். 

நான் பாஜகவில் இருக்கும் எல்லோரையும் குறை சொல்ல மாட்டேன். எனக்கு அவர்களின் கொள்கையில் பிடிப்பில்லாமல், ஏற்று கொள்ளாமல் இருக்கலாம். கொள்கை ரீதியாக, அரசியல் ரீதியாக, பண்பாட்டு ரீதியாக வாதம் செய்வது என்பது ஜனநாயக உரிமை. ஆனால், ஹெச்.ராஜா அப்படி இல்லை. கொச்சையாக பேசி அசிங்கத்தை ஏற்படுத்த கூடியவர்.  இது போன்ற ஒருவர் எம்பியானால் அது நாடாளுமன்றத்துக்கே அவமானம். இந்த சிவகங்கை தொகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு ஏற்படக்கூடிய அவமானம்’ என்று ஆவேசம் பொங்க திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். 

பாஜகவை சேர்ந்த ஹெச் ராஜா பல நேரங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தாலும் அது தனிபட்ட வகையிலோ அல்லது எந்த ஒரு சமுதயத்தினருக்குமோ பாதிப்பாக அமைந்ததில்லை. மேலும் அவர் சில நேரங்களில் தமிழக அரசியல்வாதிகள் கண்டிக்க மறுக்கும் திருமாவளவன் அவர்களின் ஒரு குறிப்பிட்ட சாதி மற்றும் மதத்திற்கு எதிரான பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் சமீபத்தில் முஸ்லீம் மதவாதிகளால் கொல்லப்பட்ட பாமக நிர்வாகியின் குடும்பத்திற்கு பெருமளவு பணவுதவியும் செய்துள்ளார்.ஆனால் சாதி மதமற்ற அரசியலை செய்வதாக கூறி கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாகவும் இந்து மதத்திற்கு எதிராகவும் திமுக தலைவர் செயல்பட்டு வருகிறார். அதே போல திருமாவளவன் போன்றவர்களை வைத்து கொண்டு இரு பிரிவை சேர்ந்த மக்களை தொடர்ந்து பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசியலில் இதுவரை திமுக தமிழகத்தை ஆண்ட போது அல்லது மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்த போது மக்களுக்காக என்ன செய்தது. வெற்றி பெற்றால் இனிமேல் என்ன செய்ய போகிறது என்பதை பற்றி மக்களிடம் பேசாமல் விமர்சனம் என்ற பெயரில் விரக்தியினால் ஆளுங்கட்சியின் கூட்டணி தலைவர்களை தொடர்ந்து ஸ்டாலின் தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து வருவது தொடர்ந்து விமர்சனத்துள்ளாகி வருகிறது.

முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் வளர்த்த திமுகவை ஸ்டாலின் குறுகிய காலத்தில் தன்னுடைய இயலமையால் அழித்து விடுவாரோ என்று அக்கட்சியினரே புலம்பி வருகின்றனர்.

Previous articleமத்திய சென்னையில் மரண அடி வாங்க போகும் திமுக சத்தமில்லாமல் சாதித்து வரும் பாமகவின் சாம் பால்
Next articleபொன்பரப்பி கலவரத்திற்கான திமுகவின் சூழ்ச்சியை ஸ்டாலின் பழமொழியை வைத்து கலாய்க்கும் சமூக ஆர்வலர்