போர் அணியை நடத்திய ஸ்டாலினை வைத்தே தனக்கு விளம்பரமாக்கிய காங்கிரஸ்! திமுகவை புலம்ப வைத்த பேரணி

Photo of author

By Parthipan K

போர் அணியை நடத்திய ஸ்டாலினை வைத்தே தனக்கு விளம்பரமாக்கிய காங்கிரஸ்! திமுகவை புலம்ப வைத்த பேரணி

சென்னையில் நேற்று நடைபெற்ற தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக திமுக சார்பில் நடைபெற்ற பேரணியில் திமுகவினரும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்,மதிமுக, கம்யூனிஸ்ட்கள் கட்சிகளை சேர்ந்த திரளானோர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்,.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, வைகோ, கி.வீரமணி, கே.பாலகிருஷ்ணன், திருமாவளவன் போன்றோர் கலந்து கொண்டனர்,. கூட்டம் வெற்றிபெற்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இது பேரணி அல்ல போர் அணி என்று முடிவில் பேசினார்,.

இது ஒருபுறம் இருந்தாலும், தற்பொழுது மு.க.ஸ்டாலினை 2021 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தங்கள் பிடியில் கொண்டு வர காங்கிரஸ் தற்போதே வியூகம் அமைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காரணம், மு.க.ஸ்டாலின் அவர்கள் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி போல் தன்னை தேசிய அளவில் மிகப்பெரிய தவிர்க்கமுடியாத தலைவராக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய அளவில் எழும்பும் எதிர்ப்புகளுக்கும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார், மேலும் பல மாநிலங்களில் புதியதாக ஆட்சி அமைக்கும் முதலமைச்சர் பதவி ஏற்கும் விழாவில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பெரும்பாலோர் விரும்பவில்லை.

மு.க.ஸ்டாலின் அவர்கள் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவராக தொடர்ந்து தென்பட்டால், பா.சிதம்பரம் போன்ற காங்கிரஸ் தலைவர்கள், ஸ்டாலின் தயவால் தான் டெல்லியில் காலூன்றுகிறார்கள் என்ற தோற்றத்தை திமுகவினர் தேர்தல் சமயத்தில் ஏலனப்படுத்திவிடுவார்கள் என்ற பயம் காங்கிரஸ் தலைமைக்கு இருக்கின்றது.

இதன் காரணமாகவே மு.க.ஸ்டாலின் உடன் நேற்று நடைபெற்ற பேரணியில் அவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் யாரும் எதிர்பாராத விதமாக கலந்து கொண்டு தேசிய அளவில் உள்ள ஊடகங்களின் பார்வையை தன் மீதும் விழச்செய்தார்,

தேசிய அளவில் மிகப்பெரிய பேரணியை விளம்பரம்படுத்தியதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எண்ணினாலும் காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் பேரணியில் கலந்து கொண்டது காங்கிரஸுக்கு சாதகமாக தான் விளம்பரம் அமைந்தது.

காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் தான் பேரணியை பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றி பெற செய்தார்கள் என்று காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் மற்ற மாநிலங்களில் பரபரப்பு செய்தியாக்கின. திமுக பேரணி மூலம் காங்கிரஸுக்கு சாதகமான விளம்பரத்தை தேடித்தந்தன என்பது தான் உண்மை.

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத உடன்பிறப்புகளோ, நம் கட்சியினரை வைத்தே தலைவர் பேரணியை நடத்தி இருந்தால் வேற மாதிரி விளம்பரம் அமைந்து இருக்கும் என்று டீ கடையில் புலம்பி வருவதாக உறுதிப்படுத்த கூடிய தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.