சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! அது ஒரு போதும் நடக்காது-திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி

0
132
DMK Leader MK Stalin Says No One can Touch DMK
DMK Leader MK Stalin Says No One can Touch DMK

சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! அது ஒரு போதும் நடக்காது-திமுக தலைவர் ஸ்டாலின் அதிரடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்! அது ஒரு போதும் நடக்காது என்று தெரிவித்துள்ளார். மேலும் பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனைகள் உள்ள வரை திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்றும் அவர் பேசியிருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நடந்த திமுகவின் மூத்த நிர்வாகி காசி விஸ்வநாதன் வீட்டு திருமண விழாவில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது.

இந்தியாவிலேயே சுயமரியாதை முழு அரசு அங்கீகாரத்துடன் நடந்து வருகிறது தமிழகத்தில் தான் . தற்போது தமிழகத்தில் சுயமரியாதை ஒரு இயக்கமாக நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. திமுக ஆட்சியில் தான் சுயமரியாதை திருமணத்திற்கு முதன் முதலாக அனுமதி வழங்கப்பட்டது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்

இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, பெரியார் மற்றும் அண்ணாவின் சிந்தனைகள் உள்ளதால் தான் தமிழகத்தில் எந்த ஆதிக்க சக்தியாலும் நுழைய முடியவில்லை. திமுகவை அவர்களின் கருத்துக்கள் தான் வழி நடத்தி வருகிறது. திமுக பல சமூக சீர் திருத்தங்களை செய்து இருக்கிறது.

அதாவது முதன் முதலாக சுயமரியாதை திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான்.1967 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை சீர் திருத்த திருமணங்களுக்கு அங்கீகாரம் இல்லை. கடந்த 1967 ஆம் ஆண்டில் முதல்வர் ,பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக தான் ஆட்சி அமைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது தெய்வீக திருமணத்தை நான் எதிர்க்கவில்லை. மேலும் பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் இருக்கும் வரை தமிழகத்தில் திமுகவை எந்த கொம்பனாலும் எதுவும் செய்ய முடியாது. தமிழகத்தில் மிக விரைவில் திமுக ஆட்சி அமையும்.

ஒரு சிலர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள், அது ஒரு போதும் நடக்காது. திமுக எப்போதையும் விட மிக வலிமையாக இருக்கிறது. லோக்சபா தேர்தலில் நாங்கள் பெற்ற வெற்றியை சட்டசபை தேர்தலிலும் பெறுவோம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்

Previous articleமருத்துவர் ராமதாஸ் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு ஏன்? ஆட்சியில் பங்கு! அன்புமணி ராமதாஸ் துணை முதல்வரா?
Next articleஇந்தியா-வங்காளதேசம் இடையேயான கிரிக்கெட்: ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்! நடந்தது என்ன?