திமுக தலைவர்கள் நல்ல சாராயம் விற்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள் கள்ள சாராயம் விற்கிறார்கள்!

0
263
#image_title

திமுக தலைவர்கள் நல்ல சாராயம் விற்கிறார்கள் திமுக உடன்பிறப்புகள் கள்ள சாராயம் விற்கிறார்கள்.

அடுத்த 10-15 நாட்களில் டாஸ்மாக்கை எப்படி மூடுவது என்பது குறித்தும், அதனால் வரக்கூடிய வருவாய் பற்றாக்குறையை எப்படி ஈடு செய்வது என்பது குறித்தும் வெள்ளை அறிக்கையை பாஜக சார்பில் முதலமைச்சரை சந்தித்து வழங்க உள்ளோம்.

அதோடு இன்று ஆளுநரை சந்தித்து ஆளுநருக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி முதலமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரிக்கை வைக்கப்படும்.

இந்தியாவில் மதுவிற்கு அடிமையானவர்கள் அதிகம் உள்ளவர்கள் இருக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது; திமுக அரசு பொறுப்பேற்று ஒரே ஆண்டில் 22 விழுக்காடு டாஸ்மாக் வருமானம் பெருகியுள்ளது-அண்ணாமலை.

தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகள் நடந்த நிகழ்வுகளையடுத்து இவற்றை திமுக அரசு தடுக்க தவறிவிட்டதாக கூறி தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் “தெருக்கள் தோறும் டாஸ்மாக் கடை! ஊர்கள் தோறும் கள்ளச் சாரயம்” எனும் தலைப்பில் திமுக அரசை கண்டித்து பாஜக மகளிர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

பின்னர் மேடையில் பேசிய அண்ணாமலை கூறியதாவது,

தமிழகத்தில் 38 இடத்தில் இன்று பாஜக மகளிர் அணி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுவை பற்றி பேசும் அரசியல் வாதிகள் ஆண்கள் ஆனால் மதுவின் காரணமாக பெரும்பாலும் பெண்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் , அதனால்தான் இன்று மகளிர் முன்னிறுத்தி இந்த போராட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் மது என்பது வாழ்க்கையின் எல்லா பக்கத்தையும் சூழ்ந்து வருகிறது . சென்ற வருடம் தமிழக அரசுக்கு டாஸ்மாக் மூலம் வந்த வருமானம் 44 ஆயிரம் கோடி ரூபாய்.இந்தியாவில் அதிகமாக மதுவை விற்று சம்பாதித்த அரசு திமுக அரசு தான்.

திமுக அரசு பொறுப்பேற்று ஒரே ஆண்டில் 22 விழுக்காடு டாஸ்மாக் வருமானம் பெருகியுள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இந்த அளவிற்கு ஒரே ஆண்டில் டாஸ்மாக் வருமானம் ஏறியது இல்லை.கள்ளச்சாராய கலாச்சாரத்தை டாஸ்மாக் மூலம் தமிழகத்தில் கொண்டு வந்த திமுகவை கண்டித்து தான் இன்று இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

கள்ளச்சாராயம் என்று ஒன்று இருப்பதால்தான் அதை தேடி சிலர் செல்கின்றனர். டாஸ்மாக்கில் குடித்து அதற்கு அடிமையானவர்கள் தான் பணம் இல்லாத காரணத்தினால் ஒரு கட்டத்தில் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர். கள்ளச்சாராயம் விற்றவர்களில் மருவூர் ராஜா என்பவர் கைது செய்யபடுள்ளார். இவர் திண்டிவனம் பகுதி திமுக கவுன்சிலர் ஒருவரின் கணவர் அதோடு அமைச்சர் செஞ்சி மஸ்தானின் நெருங்கிய தொடர்பு உடையவர்.

கள்ளச்சாராயம் விற்று கைதான அமாவாசை என்னும் நபர் தானும் கள்ளச்சாராயம் குடித்து விட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற அவருக்கும் இந்த அரசு 50000 இழப்பீடு வழங்கியுள்ளது. இந்த அமாவாசையின் சகோதரர் சித்தாமூர் திமுகவின் ஒன்றிய துணைச் செயலாளராக இருக்கிறார்.

திமுக தலைவர்கள் நல்ல சாராயம் விற்கிறார்கள், திமுக உடன்பிறப்புகள் கள்ள சாராயம் விற்கிறார்கள். தமிழகம் இந்திய அளவில் மதுவிற்கு அடிமையானவர்கள் அதிகம் இருக்கக்கூடிய மாநிலமாக மாறி உள்ளது. தமிழகத்தில் 9 சதவீதம் பேர் மதவிற்கு அடிமையாகி உள்ளனர்.

நாளை காலை பாஜக சார்பில் மகளிர் மட்டுமே அடங்கிய குழுவினர் ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளனர். அடுத்த 10-15 நாட்களில் டாஸ்மாக்கை எப்படி மூடுவது என்பது குறித்தும், அதனால் வரக்கூடிய வருவாய் பற்றாக்குறையை எப்படி ஈடு செய்வது என்பது குறித்தும் வெள்ளை அறிக்கையை பாஜக சார்பில் முதலமைச்சரை சந்தித்து வழங்க உள்ளோம்.

மூன்று வருடத்தில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை எப்படி மூடுவது என்பது குறித்து இந்த வெள்ளை அறிக்கை எடுத்துரைக்கும் இதை தமிழக அரசு அவர்கள் நீதித்துள்ள பொருளாதார வல்லுனர்களுக்கு அனுப்பி வைத்து ஆராய வேண்டும். 44000 கோடி அரசுக்கு நஷ்டம் இல்லாமல் டாஸ்மாக்கை எப்படி மூடுவது என்பது குறித்து இந்த அறிக்கையில் தகவல்கள் நிச்சயம் இடம் பெறும்.நாங்கள் கொடுக்கக் கூடிய வெள்ளை அறிக்கை வைத்துக் கொண்டு தமிழகத்தில் எந்த அமைச்சர் உடனும் விவாதத்திற்கு தயாராக உள்ளோம்.

அதோடு நாளை ஆளுநரை சந்தித்து ஆளுநருக்கு இருக்கும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி முதலமைச்சரை கலந்து ஆலோசிக்காமல் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரிக்கை வைக்கப்படும். அதோடு கள்ளச்சாராயம் விவகாரத்தில் தொடர்புடைய பலருக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நெருக்கமாக இருப்பதால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளோம்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்பது திமுகவினர் மூட்டையில் உள்ள ஒவ்வொரு 2000 ரூபாயாக வெளியே வந்தது. அப்பொழுதுதான் தமிழக மக்கள் 2000 ரூபாயை கடைசியாக பார்த்து உள்ளனர்.கர்நாடக மாநில தேர்தலில் பாஜக தோற்றத்தை மறைப்பதற்காக 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவதாக முதலமைச்சர் கூறுகிறார்.

டாஸ்மாக்கில் கரூர் கம்பெனி ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்து ரூபாய் கூடுதலாக வாங்கக்கூடிய பணம் மூட்டைகளாக மாறி உள்ளது. அதுபோல இருக்கும் மூட்டைகளுக்குள் 2000 ரூபாய் நோட்டுகள் தான் இருக்க வேண்டும்.முதலமைச்சர் தன்னிடம் உள்ள 2000 ரூபாய் மூட்டைகளை என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருக்கிறார், அதனால்தான் கர்நாடக சென்ற அவர் முகத்தில் வாட்டம் தெரிகிறது.

அதோடு தமிழகத்தில் டாஸ்மாக்கில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளதால் அதனை மேற்பார்வை செய்யுமாறு மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்
மதுவில் இருந்து தமிழகம் வெளியே வர வேண்டிய நேரம் இதுதான்

எங்களின் வெள்ளை அறிக்கை மீது முதல்வர் நடவடிக்கை எடுத்தால் திமுகவினர் பலர் நடத்தும் மது ஆலைகளை மூட வேண்டியது இருக்கும். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை. தமிழகத்தில் டாஸ்மாக்கை வரைமுறைப்படுத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

மூன்று வருடத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் எண்ணிக்கை குறைத்து அதன் மூலம் மதுவுக்கு அடிமையாளர்களை நம்மால் காப்பாற்ற முடியும். 10 நாட்களில் தமிழகத்தில் பாஜக சார்பில் தமிழகத்தில் 3 வருடங்களில் டாஸ்மாக்குகளை எவ்வாறு குறைப்பது வேறு எந்த மாதிரியான விஷயங்களில் டாஸ்மாக் மூலம் வரக்கூடிய வருமானத்தை ஈட்ட முடியும் என்பது குறித்து முதலமைச்சரிடம் வெள்ளை அறிக்கையை கொடுக்க உள்ளோம் .

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஆட்சி இல்லாத ஒரு கட்சி வெள்ளை அறிக்கையை கொடுக்க உள்ளோம்.திமுகவின் முக்கிய புள்ளிகள் நடத்தும் டாஸ்மாக் நிறுவனம் மூலமாக பல்லாயிரம் கோடி ரூபாய் லாபத்தை ஈட்டுகின்றது. அதனால் தான் டாஸ்மாக்கை மூட முடியாத நிலையில் திமுக அரசு உள்ளது.

கேரளா பீஹார் போன்ற மாநிலங்களில் மதுபான கடைகள் ஒழுங்குபடுத்தபட்டு உள்ளன கர்நாடகாவில் அரசு நடத்தாமல் தனியார் தான் டாஸ்மாக் நடத்துகிறது ஆனால் தமிழகத்தில் அரசே டாஸ்மாக்கை ஏற்று நடத்துகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மதுவுக்கு அடிமையாளர்கள் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் தமிழகத்தில் மதுபான கடையின் மூலம் வருமானம் என்பது 22 விழுக்காடு உயர்ந்துள்ளது.

மதுவுர்க்கு தமிழகத்தில் அடிமையானவர்கள் எண்ணிக்கை 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. மதுவுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கள்ளச்சாராயத்தின் விற்பனையும் அதிகரிக்கும். ஆகவே பாஜக அளிக்க உள்ள வெள்ளை அறிக்கை மூலம் தமிழகத்தில் உள்ள 80 சதவீத மதுபான கடைகளை மூடலாம். 2020 ல் மதுபானத்திற்கு அடிமையானவன் எண்ணிக்கை 5% ஆக இருந்த நிலையில் கடந்த ஆண்டு 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனுடைய பாதிப்பு சமூக பாதிப்பாக மாறிவிடும்.

மது இல்லாத இந்தியா என்பது சாத்தியமே இல்லை ஏனென்றால் இது ஜனநாயக நாடு ஆகவே தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். ஐந்தாயிரத்திற்கும் அதிகமான உள்ள டாஸ்மாக் கடைகளை ஆயிரத்திற்கும் கீழாக கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தில் மதுபான கடைகளை ஒழுங்குபடுத்தவில்லை என்றால் ஆதள பாதாளத்தை நோக்கி செல்லக்கூடிய நிலை வரும் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும்போது அதற்காக முதல் மேல் குரல் கொடுக்கக் கூடிய கட்சியாக பாஜக உள்ளது.கலாசேத்ரா விவகாரம் தாண்டி இன்னும் நிறைய தமிழகத்தில் நடைபெற்று வருகின்றது அதை பற்றி நாம் தினமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம்.

கர்நாடகாவில் முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் சித்தராமையா உடன் ஐந்தாண்டுகள் பணியாற்றியிருக்கிறேன் அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறினார்.

Previous articleசட்டமன்ற கூட்டத்துடன் மூன்று நாட்கள் நடத்த காங்கிரஸ் திட்டம்!!
Next articleஉலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி! இந்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்க லண்டன் பயணம்!!