திமுக பிரமுகரின் மகன் கைது! 8 மாத சிசுவை கலைக்க நினைத்த விபரீதம்!

திமுக பிரமுகரின் மகன் கைது! 8 மாத சிசுவை கலைக்க நினைத்த விபரீதம்!

கடலூர் மாவட்டம் கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். திமுக வை சேர்ந்த இவர் கொத்தட்டை ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவரது மகன் வசந்தகுமார் என்பவர்க்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வசந்தக் குமாரின் எதிர்வீட்டில் வசிப்பவர் காமாட்சி. இவரது தாயார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். அதனால் காமாட்சி தனது தாய் மாமன் இளையராஜாவின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார்.

கடந்த ஒரு வருடமாக வசந்த குமாருக்கும் ,காமாட்சிக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் காமாட்சி கர்ப்பம் அடைந்தார். இந்த விவகாரம் இருவரின் வீட்டிற்கும் தெரியவில்லை. இதை அறியாமல் காமாட்சியின் தாய்மாமன் இளையராஜா காமாட்சிக்கு திருமண ஏற்பாடுகள் செய்திருக்கிறார். அதற்கு காமாட்சி எதிர்ப்பு தெரிவித்து வீட்டை விட்டு வெளியேச் சென்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்த விஷயத்தை காமாட்சி வசந்தக் குமாரிடம் எங்க மாமா எனக்கு திருமண ஏற்பாடுகள் செய்து வருகிறார் என்று கூறியிருக்கிறார்.

அதற்கு வசந்தகுமார் காமாட்சியிடம் எங்க அப்பா திமுக “கட்சியில பெரிய ஆளா இருக்காங்க”. அவங்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும். அதனால் முதலில் நீ கருவை கலைத்து விடு சில மாதங்களுக்குப் பிறகு நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறார். இதை நம்பி காமாட்சியும் கருவை கலைக்க முடிவு செய்துவிட்டார். இருவரும் விருத்தாசலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார்கள். அங்குள்ள செவிலியர்கள் அரியலூர் மாவட்டம் ராங்கியம் கிராமத்தைச்  சேர்ந்த டாக்டர் கிருஷ்ணவேணி என்பவரின் தொடர்பைக் கொடுத்திருக்கிறார்கள். வசந்தகுமார் டாக்டர் கிருஷ்ணவேணியிடம் பேசி தான் 20,000 தருவதாகவும் கருக்கலைப்பு செய்யும் படியாகவும் பேசியுள்ளார். அதற்கு டாக்டர் கிருஷ்ணவேணியும் ஒத்துக்கொண்டார். இதையடுத்து காமாட்சியின் அண்ணன் வீட்டில் வைத்து காமாட்சிக்கு கருக்கலைப்பு செய்தனர்.

வசந்தகுமார் அந்த நேரத்தில் காமாட்சியின் அருகில் இருந்துள்ளார் சிறிது நேரம் கழித்து காமாட்சிக்கு ரத்தப்போக்கு அதிகமாகி உடல் நிலைபடும் மோசமானது. நேற்று இரவு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளித்தனர். இதனால் சிகிச்சையின்போது காமாட்சி இறந்துவிட்டார்.

காமாட்சியின் இறப்பிற்குக் காரணமான வசந்தகுமார் உட்பட இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி காமாட்சியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் புகார் படி ஆண்டிமடம் போலீசார் விசாரித்து இதில் சம்பந்தப்பட்ட 8 பேரையும் கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் முன் நிறுத்தினர். நீதிபதி சுப்பிரமணியன் வழக்கை விசாரித்தத போது கருக்கலைப்பு செய்ய முயன்றது முதல் தவறு . அது தவிர யாருக்கும் தெரியாமல் 8 மாத சிசுவை முந்திரி காட்டில் புதைத்து இருப்பதாக அவர்களே ஒத்துக் கொண்டனர். தவறை ஒத்துக் கொண்ட 8 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Comment