தேர்தல் பத்திரம் ரத்தால் திமுகவிற்கே இழப்பு: அண்ணாமலை அதிரடி!!

0
309
#image_title

தேர்தல் பத்திரம் ரத்தால் திமுகவிற்கே இழப்பு: அண்ணாமலை அதிரடி!!

சென்னையில் பாஜக தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, தேர்தல் நிதி பத்திரம் ரத்து குறித்த கேள்விக்கு, ” தேர்தல் நிதி பத்திரம் என்பது அரசியல் கட்சிகள் பணம் மூலமாக செலவு செய்யாமல் செக் மூலமாக செலவு செய்ய பத்திரம் அல்லது வங்கிக் கணத்திற்கு நேரடியாக பணம் வர வேண்டும் என்ற நோக்குடன் உருவாக்கப்பட்டது.

இந்த தேர்தல் பத்திரத்தின் மூலம் பாரதிய ஜனதா கட்சி 52%, காங்கிரஸ் 62%, திமுக 91%, டிஆர்எஸ் 80% நிதி வருகிறது. திமுகவும் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 600 கோடி தேர்தல் பத்திரத்தின் மூலம் வருகிறது. ஆனால் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக மாநிலத்துக்கு ரூ.212 கோடி மட்டுமே தெரிகிறது.

அப்படி பார்த்தால் தேர்தல் பத்திர ரத்தால் பாஜகவிற்கு எந்த வித பாதிப்பும் இல்லை. முழுமையாக பாதிக்கப்படபோவது திமுக தான். மேலும் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட 5500 வேட்பாளர்களுக்கும் காசோலையில் நிதி வழங்கினோம்.” எனக் கூறினார்.

Previous articleதிருவள்ளுர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!
Next articleஅதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து: அமைச்சர் செல்வராஜ் விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு!