திமுக முக்கிய புள்ளி திடீர் மருத்துவமனையில் அனுமதி! கலக்கத்தில் கட்சி தலைமை!

0
238
DMK main point sudden hospital admission! Party leadership in turmoil!
DMK main point sudden hospital admission! Party leadership in turmoil!

திமுக முக்கிய புள்ளி திடீர் மருத்துவமனையில் அனுமதி! கலக்கத்தில் கட்சி தலைமை!

திமுகவின் மூத்த நிர்வாகி மற்றும் அமைச்சரான துரைமுருகனுக்கும் சில நாட்களாக உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதை அடுத்து நேற்று திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அவரது உடன் இருந்தவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேற்கொண்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.

இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதையடுத்து அமைச்சர் துறைமுகனுக்கு  அவ்வபோது உடல்நிலை சிறிதளவு மாற்றம் எற்படும் அச்சமயத்தில் அமைச்சர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்வது வழக்கம்.

ஆனால் நேற்று திடீரென்று உடல்நலம் குறைவு ஏற்பட்டதால் மருத்துவர்கள் தற்பொழுது வரை சிகிச்சை அளித்து வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.70 வயது கடந்த நிலையில் தற்போது இவருக்கும் உடல் உபாதைகள் அதிக அளவில் ஏற்பட்ட வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleமக்களே எச்சரிக்கை.. சொத்து வரிகளுடன் ஆதார் பான் ஜிஎஸ்டி இணைப்பு! விளக்கமளிக்காத தமிழக அரசு!
Next articleகாலியாக உள்ள 1875 அரசு கல்லூரி கௌரவ விரைவுரையாளர் பணி!! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here