விருதுநகர் பகுதியில் ஏ.எஸ்.பி சிவப்பிரசாத் தலைமையிலான போலிசார் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போ அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக சென்ற இருவரை பிடித்த விசாரித்துள்ளனர்.
அந்த இருவரையும் விசாரித்ததில் மது அருந்தி இருப்பது தெரியவந்தது, இதனால் இவர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு எங்கு மது கிடைத்துள்ளது என்று விசாரித்த போது திடுக்கிட்டு தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் சப்-இன்ஸ்பெக்டர் முத்த இருளப்பன் தலைமையிலான போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிரடியாக சோதனை செய்துள்ளனர். அப்போது ஜீவா லாட்ஜில் சோதனை செய்த போது அங்கு சட்ட விரோதமாக பார் நடத்தி மது விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து பார் மேனேஜர் செல்வகணேஷ்(31), மது விற்பனையாளர்கள் கந்தசாமி(51) மற்றும் ராம சுப்பிரமணியன்(53) உள்ளிட்டோர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். அந்த சோதனையில் 4,706 மது பாட்டில்கள் காவல்துறையினரிடம் பிடிபட்டது.
இந்த சம்பவத்தில் லாட்ஜின் உரிமையாளர் மற்றும் திமுக பிரமுகரான ராஜகுருவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த பாரின் உரிமையாளர் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் நெருங்கிய உறவினர் என்று தெரியவருகிறது.