தமிழ்நாட்டில் தற்சமயம் நோய்த்தொற்று இரண்டாவது மிக தீவிரமாக பரவி வருகிறது இந்த காலகட்டத்தில் வரவேற்பு தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டுவது பேனர் வைத்தது வீண் விளம்பரம் செய்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் சிலருக்கு வரவேற்பு வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதோடு இது போன்ற பேனர் கலாச்சாரங்களால் இதற்கு முன்னர் பலரின் உயிர்கள் பறிபோய் இருக்கிறது. இப்படி இருக்கையில் தற்போது நோய் தொற்று பரவல் காரணமாக, பலர் உயிரிழந்து வருகிறார்கள் அதனால் பேனர் கலாச்சாரம் வேண்டாம் என ஸ்டாலின் தெரிவித்திருப்பதாக கூறுகிறார்கள்.அத்துடன் நாம் எல்லோரும் தற்சமயம் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் நோய்த் தொற்று பரவ காரணமாக, பொது மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது போன்ற ஒரு சூழ்நிலையில், மக்களுடன் மக்களாக நாம் இருக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.அத்துடன் இதற்கு முன்னர் அதிமுக ஆட்சியில் நடந்ததை போல எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்துவிட கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறாராம்.