கை கால்களை உடைச்சுடுவேன்! கார் கம்பனியில் திமுக எம்.எல்.ஏ மிரட்டல்

0
229

கை கால்களை உடைச்சுடுவேன்! கார் கம்பனியில் திமுக எம்.எல்.ஏ மிரட்டல்

 

தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா தனியார் நிறுவனத்திற்கு சென்று மிரட்டியது தொடர்பாக அவர் மீது மறைமலைநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

தாம்பரம் திமுக சட்டசபை உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா செங்கல்பட்டு அருகேயுள்ள சிங்கபெருமாள் கோயில் பகுதியிலுள்ள மல்ரோசாபுரத்தில் உள்ள தனியார் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சென்றார்.

 

அங்கு சென்ற அவர் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.மேலும் அவர் அங்கு ஊழியர்களுக்கு மிரட்டல் விடுப்பது போன்ற வீடியோ வெளியானது. அதில் கை, கால்களை உடைத்து விடுவேன் என அங்கு பணியாற்றிய ஊழியர்களை மிரட்டியுள்ளார்.

 

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் , “தன்னை யாரும் சாப்ட் முதல்வர் என கருதி விட வேண்டாம். நான் தேவைப்பட்டால் சர்வாதிகாரியாக மாறுவேன்” என எச்சரிக்கை விடுத்திருந்தார். அந்த வகையில் இதை குறிப்பிட்டு தற்போது ஆளும் கட்சி எம்எல்ஏவே அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார் என பாஜகவினர், அதிமுகவினர் இந்த வீடியோவை வைரலாக்கினர்.

 

இந்த நிலையில் ஆலையின் சிஇஓ கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் எம்எல்ஏ எஸ்.ஆர். ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006, 2016 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களில் தாம்பரம் தொகுதியில் போட்டியிட்ட ராஜா வெற்றி பெற்றார். அது போல் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் அவருக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது. அவர் அந்த தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவர் தாம்பரம் மாநகர திமுக செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்ட நாளில் கூட திமுகவினர் சிலர் அம்மா உணவகத்திற்கு சென்று கலாட்டா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல திமுக எதிர்கட்சியாக இருந்த போதும் பிரியாணி கடை,பஜ்ஜி கடை என அக்கட்சியின் தொண்டர்கள் அராஜகத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.தற்போது அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleகபடி வீரர்களுக்கான உணவு கழிவறையில் வைக்கப்பட்ட விவகாரம்… அதிகரிக்கும் கனடனங்கள்
Next articleபோக்குவரத்துத் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! இந்த தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்!