பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

0
276
#image_title

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

 

தமிழகத்தில் அரசியல் பரபரப்பிற்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. அதுவும் ஆளும் கட்சியான திமுக என்றால் கேட்கவா வேண்டும்.

 

தமிழகத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், விரைவில் கூட இருக்கும் சட்டமன்ற கூட்ட தொடர் பற்றிய அடுத்த பரபரப்பு தமிழகத்தில் தொற்றி கொண்டது.

 

இந்த பட்ஜெட் கூட்ட தொடர் சம்பந்தமாக அணைத்து கட்சி எம்எல்ஏக்களும், தங்களது சட்டமன்ற உறுப்பினர்களை தயார் படுத்தி வருகின்றனர்.

 

ஆளும் கட்சியான திமுகவும் தங்களது சட்டமன்ற உறுப்பினர்களை வரும் 21-ம் தேதி மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் ஆஜராகும்படி, அக்கட்சியின் அரசு தலைமை கொறடா கோவி செழியன் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்றும், எனவே அணைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

இது தவிர 22-ம் தேதி திமுக மாவாட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்றும், அந்த கூட்டமும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று, திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

 

இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇன்புளூயன்சா காய்ச்சல் முதல் உயிர் பலி! குஜராத்தில் தீவிர கண்காணிப்பு
Next articleரேஷன் அரிசியை கடத்த இனி வாய்ப்பில்லை! மீறினால் கடும் நடவடிக்கை தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை!