ரேஷன் அரிசியை கடத்த இனி வாய்ப்பில்லை! மீறினால் கடும் நடவடிக்கை தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை!

ரேஷன் அரிசியை கடத்த இனி வாய்ப்பில்லை! மீறினால் கடும் நடவடிக்கை தமிழக அரசு வெளியிட்ட எச்சரிக்கை!

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் இலவசமாக தானியங்கள் மற்றும் ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர் லோயர் கேம் பகுதிகளில் ரேஷன் அரிசி அதிகமாக சேகரிக்கப்பட்டு அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிகம் கடத்தப்பட்டு வருகிறது.

மேலும் அதை காவல்துறையோ உத்தமபாளையம் புட்செல் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மாவட்டம் தோறும் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து மாட்டுத்தீவனம் போல் தினம் தோறும் சரக்கு வாகனங்களில் கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகின்றது. இதைப்பற்றி புட்செல் அதிகாரிகளிடம் தகவல் கேட்ட பொழுது அரைத்துக் கொண்டு செல்லும்போது எங்களால் வழக்கு பதிவு செய்ய முடியாது என அதிகாரிகள் பதில் அளித்தனர்.

மேலும் இது பற்றி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிந்து உரிமை சார்ந்த அதிகாரிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறினார்கள். மேலும் கம்பம் பகுதியில் ரேஷன் அரிசியை மாவு அரைத்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பவும் வியாபாரிகள் அதிகமாகிக் கொண்டே வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ரேஷன் அரிசி கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து  தான் வருகின்றது. இது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் பல எச்சரிக்கை அறிவிப்புகளையும் தெரிவித்து வருகின்றது. மேலும் ரேஷன் அரிசியை விற்க முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

இது குறித்த அவர் கூறுகையில்  செறி ஊட்டப்பட்ட அரசி  என்பது பிளாஸ்டிக் அரிசி என்று சிலர் நினைக்கின்றனர்.செறி ஊட்டப்பட்ட வரிசையில் 100 ல் 1 இல் தான் வைட்டமின்கள் இருக்கும். வளர்ச்சி குறைவு மற்றும் ரத்த தொகை உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்களுக்காகவே வைட்டமின்கள் செறி ஊட்டப்பட்டதாக உள்ளது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.