தேர்தலுக்காக அதிமுக போட்ட அதிரடி திட்டம்! கலக்கத்தில் திமுக அவசர உத்தரவு
வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஆளும் அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.அதே நேரத்தில் அதையும் சமாளிக்கும் விதமாக ஆளும் தரப்பை பல்வேறு விதங்களில் திமுக எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை சேலத்தில் தொடங்கிய முதல்வரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் இந்த ஆண்டு மக்களுக்கான பொங்கல் பரிசு தொகையாக 2,500 ரூபாயை அறிவித்தார்.
இந்த திட்டமானது 2014 ஆம் ஆண்டே துவங்கப்பட்டது என்பதும், அப்போது ஆட்சியில் இருந்த முதல்வரான மறைந்த ஜெயலலிதா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் 100 ரூபாய் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் கொடுக்கப்பட்டது .பின்பு இந்த தொகை படிப்படியாக உயர்த்தப்பட்டு சென்ற ஆண்டு ரூபாய் 1000 கொடுக்கப்பட்டது.ஆனால் இந்த திட்டத்தின் மூலம் ஆளும் அரசுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடக்கூடாது என்று 2019 ஆம் ஆண்டே பொங்கல் பரிசு உடன் 1000 ரூபாய் பணம் தருவதை எதிர்த்து திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனாலும் பொங்கல் பரிசு தொகை கொடுப்பதை எதிர்க்கட்சியாக உள்ள திமுகவால் தடுக்க முடியவில்லை.
அதேபோல் தற்போது வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டும் ஆளும் அதிமுக அரசு சார்பாக
தமிழகத்தில் உள்ள அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 2.10 கோடி பேருக்கு பொங்கல் பரிசாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஏலக்காய், முந்திரி மற்றும் ஒரு கரும்பு வேட்டி ,சேலை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதுடன், ரூ.2,500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பானது தமிழக மக்களிடையே வரவேற்ப்பு மற்றும் சில தரப்பினர் மத்தியில் விமர்சனத்தை பெற்றாலும்,அரசியல் ரீதியாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சோகத்தையே ஏற்படுத்தியது.விரைவில் தேர்தல் வருவதால் இந்த பணத்தை வழங்குவதால் அதிமுக அரசுக்கு செல்வாக்கு அதிகமாகிவிடும் என்று திமுக தரப்பு அஞ்சுகிறது.குறிப்பாக இந்த முறை எப்படியாவது முதல்வராகி விட வேண்டும் என்று செயல்பட்டு வரும் திமுக தலைவரின் ஸ்டாலின் நோக்கத்திற்கு இந்த பொங்கல் பரிசு பெரும் ஆபத்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உணர்ந்த ஸ்டாலின் அவர்கள் பொங்கல் பரிசு தருவதை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார்.
மேலும் இது குறித்து ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய பொழுது ஊரடங்கு காலகட்டத்தில் ஏழை மக்களுக்கு 5000 ரூபாய் தர சொன்னோம். ஆனால் அப்போது அமைதியாக இருந்துவிட்டு இன்னும் நான்கு மாதங்களில் சட்ட மன்ற தேர்தல் வரும் நேரத்தில் பொங்கல் பரிசாக ரூபாய் 2,500 அறிவித்திருப்பது மக்கள் நலனுக்காக இல்லை. இது அவருடைய சுயநல அரசியலுக்காக என்று விமர்சித்துள்ளார்.ஸ்டாலின் குற்றச்சாட்டை மறுத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதில் எந்த அரசியல் உள் நோக்கமும் இல்லை என்றும், ஏழை குடும்பத்தில் பிறந்த எனக்கு ஏழைகளின் கஷ்டம் தெரியும் என்றும், அதனால் தான் பொங்கல் பரிசை தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே திமுக தொண்டர்கள் எங்கே பொங்கல் பரிசுத்தொகையை வாங்கிக்கொண்டு மனம் மாறிவிடுவார்களோ என்ற அச்சத்தில் அதிமுக அரசின் இந்த பரிசை புறக்கணிக்க அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.அதாவது இதன் மூலமாக திமுக நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை யாரும் ஆளும் அதிமுக அரசு தரும் பொங்கல் பரிசை வாங்க கூடாது என்று அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த சில தொண்டர்கள் பொங்கல் பரிசை வாங்க மாட்டோம் என்று முடிவு எடுத்துள்ளதாகவும், ஆனால் பல அடிமட்ட தொண்டர்களோ தலைமை சொல்வதை காதில் வாங்காமல் எப்போதும் போல வாங்கிக் கொள்ள தான் போகிறோம் என்றும் அவர்களுக்குள் பேசி வருகிறார்களாம்.