சன் குழுமத்தில் திமுக எம்.பி செய்தி வெளியிட தடை! திமுகவில் நடக்கும் உச்சக்கட்ட போர்!

Photo of author

By Parthipan K

சன் குழுமம் நடத்தும் செய்தி தாள்கள் மற்றும் தொலைக்காட்சியில் திமுக எம்.பி செந்தில்குமார் பற்றி செய்தி வெளியிட தடை, திமுகவில் நடக்கும் உச்சக்கட்ட போர்.

2021 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால், திமுக, அதிமுக கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு ஊர் ஊராக சென்று தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்கள். அதேபோல் செய்திதாள்களிலும், மற்றும் தொலைக்காட்சியிலும் விளம்பரங்கள் செய்கிறார்கள்.சில நாள்களுக்கு முன்பு ஆளும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அரசு பற்றி தேர்தல் விளம்பரங்கள் தயாநிதி மாறன் நடந்தும் சன்‌டிவி மற்றும் கே.டிவி ஆகியவற்றில் இடம் பெற்றது.

இதைப்பார்த்த திமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள். திமுக ஆதரவு சேனலில் அதிமுக அரசுக்கு ஆதரவான விளம்பரங்களா? என்று,அதிர்ச்சியடைந்தர்கள்.
அதே போல் தினகரன் நாளிதழ்களிலும் அதிமுக அரசின் தேர்தல் விளம்பரங்கள் அச்சிடப்பட்டது.

இதனால் மேலும் கடுப்பான திமுக தொண்டர்கள், பலரும் சன் குழுமம் மீது விமர்சனங்களை வைக்க, திமுக எம்.பியான செந்தில்குமார் அவர்களும் தன் பங்குக்கு காட்டமாக ஒரு ட்விட் செய்தார். அதாவது, ;ஒன்று அதிமுக விளம்பரங்களைச் சுமந்து பணம் சம்பாதியுங்கள், அல்லது திமுக தொண்டனுக்கு விசுவாசமாக இருங்கள் என்றும் .இல்லையெனில் திமுகவுக்கும், சன் தொலைக்காட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லிவிட்டு அதிமுக அரசின் விளம்பரங்களை வெளியிடுங்கள் என்றும் சன் குழுமத்தை எதிர்த்தும் பேசி வந்துள்ளார்.

இதைப்பார்த்த சன் குழுமம் வியாபார நோக்கத்துடன் தான் அதிமுகவின் விளம்பரங்களை வெளியிட்டோம் என்று மழுப்பினாலும் இதற்கு பின்பு என்னவோ சதி உள்ளது என்று பேசப்பட்டு வருகிறது.

சன் குழுமத்தை தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை பற்றி பேசி வந்ததால் சன் குழும நாளிதழ்களான தினகரன், மாலை நாளிதழ்,தமிழ்முரசுகளிலும் திமுக எம்பி செந்தில் குமார் பற்றி செய்தி வெளியிட தடை செய்யப்பட்டுள்ளாதக பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் செந்தில் எம்பி அவர்களே ட்விட் செய்துள்ளார்.
அதாவது இனி என்னை சார்ந்த செய்தி வெளியிட வேண்டாம் என சன் குழுமத்திற்கு
அவர்கள் நிருபர்களுக்கு அந்த நிறுவனம் கட்டளை பிறப்பித்துள்ளது

சமூக வலைதளம் முக்கியத்துவம் வாய்ந்த இக்காலத்தில் சீப்பை மறைத்து வைப்பது சாத்தியம் இல்லாத ஒன்று?
என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

 

இதற்கு செந்தில்குமார் எம்.பி அவர்கள் வளர்ச்சியை பொருத்து கொள்ள இயலாமல் தான் சன் குழுமம் இவ்வாறாக நடந்து கொள்கிறது என்றும், சிலர் திமுக சொந்த ஊடகத்தில் உங்கள் செய்தியை போய் வெளியிட தடை செய்வார்களே இது எல்லாம் உங்கள் சுய விளம்பரம் என்று பதிவிட்டு வருகிறார்கள்.